ரஜினி ஃபவுண்டேஷன் பெயரில் பேஸ்புக்கில் பேக் ஐடி.. ரூ.2 கோடி மோசடி என புகார்.. நடந்தது என்ன?
சென்னை: ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் பேஸ்புக்கில் போலி ஐடி தொடங்கி ரூ.2 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை காவல் ஆணையரகத்தில் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலப்பணிகள் இந்த அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலியாக பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ. 2 கோடி பண மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை காவல் ஆணையரகத்தில் ரஜினி பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி 200 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்குவதாக கூறி ரூ. 2 கோடி வரை வசூல் செய்து மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது.
ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் இது இருப்பதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்கள் போலீஸ் விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.

ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி எந்த பகுதியில் மோசடி நடைபெற்றது என்பது குறித்தும் பணத்தை இழந்தவர்களிடம் விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications