Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டுக்கு 1000, காமாட்சி விளக்கு.. சட்டசபை தேர்தலை மிஞ்சும் பண மழை.. ஊரக உள்ளாட்சி தேர்தல் வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு சரமாரியாக பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது.

சட்டசபை தேர்தல்களை மிஞ்சும் அளவுக்கு ஒரு சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக இன்று 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 1577 கிராம ஊராட்சி தலைவர் 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

கவுரவ பிரச்சினை

கவுரவ பிரச்சினை

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் மிகப்பெரிய அளவிலான தேர்தல் இது என்பதால் ஆளும் கட்சிக்கு இது ஒரு கவுரவ பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிக இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறவில்லை என்பதற்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு என்று அவர்கள் பிரச்சாரம் செய்து விடுவார்கள் என்பதால் மற்ற கட்சிகளை விடவும் திமுக மிகவும் ஜாக்கிரதையாக இந்த தேர்தலை சந்தித்து வருகிறது.

அதிமுகவிற்கு முக்கியம்

அதிமுகவிற்கு முக்கியம்

இதேபோல அதிமுக தரப்பிடமும் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சட்டசபை தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதுதான் அக்கட்சித் தலைவர்களின் முக்கிய பிரச்சாரமாக இருந்து வந்தது. எனவே இதில் வெற்றி பெற்று நாங்கள் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதை ஆளுங்கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அதன் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள், அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்று பதிவாகிவிடும் என்ற அச்சம் அதிமுக தரப்புக்கு உள்ளது.

திமுக அரசு நடவடிக்கை

திமுக அரசு நடவடிக்கை

வேலுமணி உட்பட பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்தால் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க தயங்கும் . எனவே இந்த தேர்தலில் அதிமுகவுக்கும் ஒரு அக்னி பரிட்சை தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Recommended Video

    இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.. Minister Jayakumar குற்றச்சாட்டு
    ஆயிரம் ரூபாய்

    ஆயிரம் ரூபாய்

    இந்த நிலையில்தான் வேட்பாளர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சில பஞ்சாயத்துகளில் 500 ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சில பஞ்சாயத்துகளில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

    காமாட்சி விளக்கு

    காமாட்சி விளக்கு

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பூஜை அறையில் வைக்க கூடிய காமாட்சி விளக்கு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காமாட்சி விளக்கு மீது சத்தியம் செய்து எங்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று செண்டிமெண்டாக கூட வேட்பாளர்கள் பேசியுள்ளனர். நெல்லை தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்பாளர்கள், தங்களால் நிறைவேற்ற முடியுமோ முடியாதோ ஆனால், கயிறை மணலை கயிறாக திரிப்பது, வானத்தை வில்லாக வளைப்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து, இது சத்தியம் என்ற வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள் என்கிறது கள நிலவரம்.

    பண மழை

    பண மழை

    இந்த விஷயத்தில் எந்த ஒரு கட்சியும் தார்மீகம் பேச முடியாத அளவுக்கு பண மழை பொழிந்து உள்ளது. ஆளும் திமுக முக்கியமான அமைச்சர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாக நியமித்து உள்ளது என்றால், அதிமுக முன்னாள் அமைச்சர்களை நியமித்துள்ளது. எனவே வெற்றி என்ற ஒன்றுதான் இவர்களுக்கு பிரதானமாக இருக்கிறது. இதனால் 9 மாவட்டங்களிலும் மக்கள் கையில் தாராளமாக பணம் புழங்குவதாக கூறுகிறது களத்தில் இருந்து வரும் தகவல்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+