Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யானைகளின் உயிரைக் காப்பாற்ற ‘ஏஐ’ கருவி.. இதிலும் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு முன்னோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு முன் மாதிரியான ஒரு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் யானைகள், அங்கே போடப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களில் அடிப்பட்டு உயிரிழப்பது அடிக்கடி நிகழும் அவலம்.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

காடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அதன் உயிர்நாடியாக இருக்கும் யானைகளைக் காப்பாற்றுவது அவசியம். அவை இல்லை என்றால், காலப்போக்கில் வனங்களும் அழிந்துவிடும். இதைப் பல வருடங்களாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்கட்டி வருகின்றனர்.

ஆனாலும் வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிப்பட்டுச் சாவதைத் தடுப்பதற்கு முறையான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த முயற்சியில் இறங்கி முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு. அதற்காகச் செயற்கை நுண்ணறிவு முறையில் யானைகள் நடமாட்டத்தைக் கண்டறியும் தானியங்கி கருவிக்கு நுண்ணறிவு ஊட்டும் திறன் அளிக்க வனத்துறை முயற்சி எடுத்து வருகின்றது

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

உயிரிழப்பதைத் தடுக்க கண்காணிப்பு:

தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையான வாளையார், மதுக்கரை இடையே சுமார் 7 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாகக் கோவையிலிருந்து கேரளாவுக்கு ரயில் பாதைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் 2008 முதல் 2022 வரை ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

இவை மட்டும் அல்லாமல் சிறிய வகையிலான காட்டு விலங்குகளும் இந்தத் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. ஆனால், அவை யானை அளவுக்குப் பெரிய உரியினங்கள் இல்லை என்பதால் அச்செய்திகள் அதிகம் கவனம் பெறுவதில்லை.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

ஆகவே, இந்த வாயில்லா ஜீவன்களான வன விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான பெரும் முயற்சியை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. அதற்கான முதற்கட்டமாக இந்த ரயில்வே தண்டவாளங்கள் அருகே சோலார் மின் விளக்குகள் அமைத்தல், ஒலி எழுப்பும் கருவிகளைப் பொருத்துதல், கண்காணிப்பு கோபுரங்களை நிறுவுதல், மேலும் விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் வரை ரயிலை 40 கிமீட்டர் அளவில் மட்டுமே இயக்குவது போன்ற நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

7 கோடி ரூபாய் செலவில் திட்டம்:

பாலக்காடு ரயில்வே கோட்டம் மற்றும் வனத்துறை இணைந்து 7 கோடி ரூபாய் செலவில் யானைகள் கடக்கும் பாதைகளில் சுரங்கப்பாதைகளை அமைக்க முடிவும் செய்தனர். அந்த முடிவின்படி முதல் சுரங்கப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு, அங்கே கண்காணிப்புக் கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

மேலும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தப் பகுதியைக் கண்காணிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் முழு நேரமும் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிப்பதற்கான திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்தத் திட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது தங்களைப் போன்ற ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கை என்றும், அதை நிறைவேற்றித் தந்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அடர் வனப்பகுதியை ஒட்டி செல்லும் தண்டவாளத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என்று இயற்கை ஆர்வலர் காளிதாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

80 அடி உயரத்தில் 12 கோபுரங்கள்:

"யானைகள் தண்டவாளங்களின் அருகில் வருவதை Artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிப்புக் கோபுரங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கோபுரமானது யானைகள் ரயில் தண்டவாளத்தின் அருகே வருவதை உணர்ந்தால், அதைச் செய்தியாக ரயில் ஓட்டுநருக்குத் தெரிவித்துவிடும். அவர் உடனே வழக்கமான வேகத்தைக் குறைந்து, ரயிலை மெதுவாக இயக்குவார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்படும். இதைச் செய்து தந்த முதல்வர் ஸ்டாலினை நாங்கள் பாராட்டுகிறோம்" என்கிறார் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாசன்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு கோபுரங்கள் சுமார் 80 அடி உயரத்தில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில்தான் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன. அதை அறிந்தே கோபுரங்களை அங்கே அமைத்துள்ளது வனத்துறை.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

கோபுரங்களில் மிக நவீன கேமராக்கள் இரண்டும் பொருத்தப்பட்டுள்ளன. அவை தூரத்தில் வரும் யானைகளைக் கூர்ந்து அறியும் திறன் கொண்டவை.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

இந்தச் செயற்கை நுண்ணறிவு கருவிக்கு யானைகளின் அனைத்து தரவுகளையும் வல்லுநர்கள் சேகரித்துத் தந்து, அதன்படி இயங்குவதற்கான பயிற்சியை அளித்துள்ளனர். அந்தக் கருவிக்கு யானையின் நிறம், உயரம், அகலம், நடந்து வரும் ஓசை என அனைத்தும் அத்துப்படி. ஆகவே அதனை ஏமாற்றுவது கடினம்.

 Monitoring with artificial intelligence tools to prevent elephants from getting hit by train tracks

யானை வரும் பின்னே.. அதன் தகவல் வரும் முன்னே' எனப் புதுமொழி பிறக்கட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+