சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் குரங்குகள், நாய்கள்! பயணிகள் அவதியுறுவதாக புகார்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நாய்கள் சுற்றித் திரிவதை தொடர்ந்து இப்போது குரங்குகளின் அட்டகாசங்களும் ஆரம்பித்துள்ளன.
சென்னை ஏர்போர்ட்டை பொறுத்தவரை பயணிகள் எண்ணிக்கை, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்கால நலன் கருதி சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் சரக்குகளை கையாள்வதில் மும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கு அடுத்தப்படியாக நாட்டிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையம் என்ற சிறப்பை சென்னை விமான நிலையம் பெற்றிருக்கிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் விமானப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டொன்றுக்கு சராசரியாக 2 கோடி விமானப் பயணிகளை கையாள்கிறது சென்னை விமான நிலையம். அதேபோல் தினமும் சென்னை விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு என எல்லா முனையங்களில் சேர்த்தும் 400 முதல் 500 விமானங்கள் வந்து செல்கின்றன.
இதனால் எப்போதுமே சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்தச் சூழலில் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும், அசவுகரியம் கொடுக்கும் வகையில் அங்கு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார் எழுந்த நிலையில் இப்போது கூடுதலாக விமான நிலைய மேற்கூரைகளில் குரங்களும் அட்டகாசங்கள் செய்வதாக புகார் வந்துள்ளது. சென்னை அப்டேட்ஸ் என்ற சமூக வலைதளப் பக்கங்களில் இது தொடர்பான புகார் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்துள்ளன.

பெங்களூர் விமான நிலையம் கார்டன் போன்று இருப்பதாகவும் சென்னை விமான நிலையம் ஜூ போன்று இருப்பதாகவும் அந்த சமூக வலைதளப் பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் மற்றும் ஆள் அரவமற்ற பகுதிகளில் தான் நாய்கள் அதிகம் உள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனால் விலங்குகள் நல ஆர்வலர்களும், புளு கிராஸ் அமைப்பினரும் தன்னார்வமாக நாய்களையும், குரங்குகளையும் விமான நிலையத்திலிருந்து பிடித்துச்செல்ல முன் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடையே எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications