ஜில்லென பெய்யப்போகும் பருவமழை.. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களே என்ஜாய்
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளிலும், கர்நாடகாவில் சில பகுதிகளிளும் தென்மேற்கு பருவக்காற்று துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் ஒன்றாம் தேதி வரை கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வானிலை மாற்றம் காரணமாக நேற்று தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளிலும், கர்நாடகாவில் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே முன்கூட்டியே பருவமழை தொடங்கினாலும் ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் பருவமழை தீவிரமடையத்தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பை ஒட்டியே இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications