சென்னையில் தனியார் அலுவலகத்தில் ஒரே மாடியில் பணிபுரிந்து வந்த பலருக்கு திடீர் மயக்கம்! என்ன நடந்தது
சென்னை: தலைநகர் சென்னையில் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த பலருக்கு ஒரே நேரத்தில் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் நாம் அலுவலகத்தை விட்டுவிட்டு ஒர்க் பர்ம் ஹோம் கலாச்சாரத்திற்கு மாறினோம். இப்போது கொரோனா முடிந்துள்ள நிலையில், அனைவரும் மெல்ல அலுவலகம் திரும்பி வருகிறோம்.

குறிப்பாகத் தனியார் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வர சொல்கிறார்கள். இதனால் ஊழியர்களும் மெல்ல அலுவலகம் திரும்பி வருகின்றனர்.
ஷாக் சம்பவம்: இதற்கிடையே சென்னையில் அலுவலகம் ஒன்றில் ஷாக் சம்பவம் தான் நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திடீரென தலைச் சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் கந்தன்சாவடியில் இருந்து தரமணி செல்லும் எம்.ஜி.ஆர் சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல நூறு பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த கட்டிடத்தில் 10ஆவது மாடியில் வங்கியின் கிரிடிட் கார்டு பிரிவு இயங்கி வந்தது. நேற்று இதில் வழக்கம் போல சுமார் 250 பேர் பணி புரிந்து வந்துள்ளனர்.
தலைச்சுற்றல்: மதியம் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே இருந்துள்ளது. இதற்கிடையே மாலை சுமார் 3 மணியளவில் திடீரென அங்கே பணிபுரிந்து வந்தவர்களுக்குத் தலைச் சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அந்நிறுவனத்தின் எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 5 ஆண்கள், 10க்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 17 பேர் என அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இருவர் அருகில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி: 250 பேர் பணிபுரிந்து வந்த நிலையில் 17 பேருக்கு மட்டும் திடீரென தலைச் சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் அந்நிறுவனத்தின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஏசியில் இருந்து வாயு கசிந்ததால், மயக்கம் ஏற்பட்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.. ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு அடுத்தடுத்து மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications