Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த பையனோடு ஏன் பழகுறே.. தட்டிக் கேட்ட தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள்!

பெற்ற தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதலை கைவிட கூறிய தாயை உயிருடன் எரித்த மகள்- வீடியோ

    சென்னை: "கல்யாணம் ஆன பொண்ணு நீ... அந்த பையனோடு ஏன் பழகுறே" என்று கேட்ட பெற்ற தாயை மகளே எரித்து கொன்றுள்ளார்!! சம்பந்தப்பட்ட கள்ளக்காதலனை கூட்டு சேர்த்துகொண்டு இந்த கொடூரத்தை மகள் அரங்கேற்றி உள்ளார்.

    தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த பெண்மணி பூபதி. இவருக்கு 60 வயது. இவரது இளைய மகள் நந்தினி. கடந்த 7-ம் தேதி திடீரென நந்தினி பதறியடித்து கொண்டு குரோம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்தார்.

    "வீட்டில் படுத்து தூக்கிட்டு இருந்த என் அம்மா உடம்பு தீப்பிடித்து எரிந்து போச்சு" என்று கதறி அழுதார். இது சம்பந்தமாக புகாரையும் கொடுத்து நந்தினி நடவடிக்கை எடுக்க சொன்னார்.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இது சம்பந்தமாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து, உடனடியாக விரைந்து சென்று, தீக்காயத்துடன் போராடிக் கொண்டிருந்த பூபதியை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பூபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டார்.

    எப்படி தீப்பிடிக்கும்?

    எப்படி தீப்பிடிக்கும்?

    "வீட்டில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்த என் அம்மா உடம்பு தீப்பிடித்து எரிந்து போச்சு" என்று கதறி அழுதார். இது சம்பந்தமாக புகாரையும் கொடுத்து நந்தினி நடவடிக்கை எடுக்க சொன்னார்.

    கள்ள உறவு

    கள்ள உறவு

    அப்போதுதான் நந்தினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், ஆனால் திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருடன் கள்ள உறவு வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. இந்த உறவு தாய் பூபதிக்கு தெரியவந்துள்ளது. அதனால்தான் "கல்யாணம் ஆன பொண்ணு நீ... அந்த பையனோடு ஏன் பழகிறே" என்று கண்டித்துள்ளார்.

    உயிரோடு எரிப்பு

    உயிரோடு எரிப்பு

    இந்த கேள்விதான் நந்தினிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி அம்மாவையே கொலை செய்ய துணிய வைத்தது. இதற்காக, கள்ளக்காதலன் முருகனை துணைக்கு வைத்து கொண்டு, ரெண்டு பேரும் சேர்ந்துதான் பூபதி உடலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    மாபாதக செயல்

    மாபாதக செயல்

    இதற்கு பிறகு நந்தினி, முருகனை போலீசார் கைது செய்தனர். அறிவுரை சொன்ன காரணத்துக்காக தாயையே உயிரோடு எரித்து கொன்று மாபாதக செயலில் ஈடுபட்ட மகளின் செயல் சென்னை மக்களை அதிர வைத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+