கரி கட்டையாக விழுந்த லதா.. ஒரு வயது குழந்தையுடன் தீக்குளித்த பரிதாபம்.. சென்னையில்!
ஒரு வயது குழந்தையுடன் பெற்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: கொஞ்ச நேரத்திலேயே லதாவின் உடல் கரிக்கட்டையாக எரிந்துவிட்டது.. ஒரு வயது குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தன் மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார் இளம்தாய்!!! சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சத்யநாராயணன்... அதே பகுதியில் ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா.. 27 வயதாகிறது.. திருமணமாகி நிகிதா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில் லதா 2-வது முறையாக கர்ப்பமானார்... ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டது.. அதனால் போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டது.
பிறகு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம்தான் வீட்டிற்கு திரும்பி வந்தார்... ஆனாலும் தொடர்ந்து ரத்த போக்கு இருந்து கொண்டே இருந்துள்ளது... நேற்று காலை வழக்கம் போல் சத்யநாராயணன் வேலைக்கு சென்று விட்டார்... அதனால் வீட்டில் லதாவும், குழந்தை நிகிதாவும் மட்டும் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில்.. திடீரென அலறல் சத்தம் கேட்டது.. அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. வீட்டிற்குள்ளிருந்தும் புகை வெளியே குபுகுபுவென வந்தது.. அதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான் தாயும் - குழந்தையும் மொத்தமாக தீயில் பற்றி கொண்டு எரிந்தனர்.. உயிருக்கு போராடிய இருவரும் கொஞ்ச நேரத்திலேயே கருகினர்.
இதையடுத்து அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.. அப்போதே லதா 80 சதவீதம் தீக்காயம் அடைந்துவிட்டார்... அவரை பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. சிறிது நேரத்துக்கு பிறகு சிகிச்சை பலனின்றி குழந்தையும் இறந்துவிட்டது.
தகவலறிந்து ராயப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. லதா எதனால் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.. கரு கலைந்ததால் விரக்தி அடைந்தாரா? அல்லது குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனையா என தெரியவில்லை.. இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.. கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆவதால், ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.
ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குழந்தையையும் சேர்த்து தீ வைத்து எரித்தது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications