தாய்ப் பத்திரம், அசல் ஆவணம், வில்லங்க சான்றிதழ்! பத்திரப்பதிவு செய்ய போனால் இனி நிற்க வேணாம்: ஹேப்பி
சென்னை: தமிழக பதிவுத்துறை, பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளையும், அதிரடிகளையும் முன்னெடுத்து வருகிறது.. குறிப்பாக பத்திரப்பதிவு செய்ய வருவோர்களுக்கு எந்தவிதமான அசௌகரியத்தையும் தந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் சார் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ஒரு அதிரடியை பதிவுத்துறை செய்துள்ளது.. இது பத்திரம் பதிய சார் பதிவாளர் அலுவலகம் செல்வோரின் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்து வருகிறது.
பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகம் செல்ல நேரிடும்போது, ஒருசில காரணங்களை காட்டி பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார்கள் கிளம்பின.. அதேபோல, அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்புவதாகவும் சில இடங்களில் முணுமுணுப்புகள் எழுந்தன.

அசல் ஆவணங்கள்
எனவேதான், அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என்றும் சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என்றும், மூல ஆவணத்தின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நகலை பார்த்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சார்பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சார்பதிவாளர்கள் பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்து தான் பேச வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிற்க வைத்து பதிலளிக்கக்கூடாது. இதனை மீறும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை ஐஜி மற்றொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
வில்லங்க சான்றிதழ் நகல்கள்
இது குறித்து பிரத்யேகமாக சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை மூலமாக ஆவணப்பதிவுகள் மட்டுமல்லாமல், திருமணங்கள் பதிவு செய்தல் வில்லங்க சான்றிதழ்களின் நகல்கள் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதை பயன்படுத்தும் விதமாக தினமும் நமது துறையின் கீழ் 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பொது மக்கள் பலர் தினந்தோறும் வருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை சார்பதிவாளரிடமோ அல்லது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடத்திலோ அளிக்கும் பொருட்டு மேற்கண்ட அலுவலர்கள் சந்திக்க வரும்போது நமது சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர் மேஜைக்கு எதிரிலும் மற்றும் உதவியாளர் / இளநிலை உதவியாளர் மேஜைக்கு எதிர் புறமும் நாற்காலிகள் கண்டிப்பாக போடப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலருக்கு முன்னாலும் குறைந்த பட்சம் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
சிசிடிவி கேமரா
பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்துதான் சார்பதிவாளர்கள் பேச வேண்டும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிற்க வைத்துக்கொண்டு பதில் அளிக்கக்கூடாது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுரைகள் ஆய்வு கூட்டங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது CCTV மூலம் பார்க்கும்போது இத்தகைய நடைமுறை பல அலுவலகத்தில் பின்பற்றப்படவில்லை என தெரிய வருகிறது.
மாவட்டப் பதிவாளர்கள் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகங்களில் இது தொடர்பாக கண்காணிக்க துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திலும் இருக்கக்கூடிய CCTV யில் கண்காணிக்கப்படும் போது இந்த சுற்றறிக்கை மூலமாக கொடுக்கப்படுகின்ற இந்த அறிவுரைகள் மீறும் பட்சத்தில், உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications