மாமியாருடன்.. அடங்காத ஆட்டோ டிரைவர்.. அதிகாலையில் அரிவாளை கையில் எடுத்த மருமகன்
மாமியாருடன் தொடர்பில் இருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது
சென்னை: மாமியாருடன் நெருங்கி பழகிய ஆட்டோ டிரைவரை மருமகன் வெட்டிவிட்டார்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மகளுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணை தேடி செல்லும் மருமகன்கள் ஏராளம் உண்டு.. பெற்ற மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, மருமகனை கொலை செய்ய துணிந்த மாமியார்கள், கைதான சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆனால், இங்கு ஒரு மாமியாருக்கு கள்ளக்காதல் வந்துள்ளது.. அது கொலைவரை சென்றுவிட்டது.. இப்படித்தான் கடந்த மாதமும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது..

கள்ள உறவு
34 வயது இளைஞருடன் மாமியாருக்கு கள்ள உறவு இருப்பது தெரிந்ததும் கொந்தளித்து போயுள்ளார் மருமகன்.. இதனால், கள்ளக்காதல் ஜோடிக்கு வார்னிங் தந்துள்ளார் மருமகன்.. குடும்ப கவுரவம் போய்விடக்கூடாது என்று மாமியாரிடம் எடுத்து சொல்லி உள்ளார்.. எனினும் இருவருமே அவர் பேச்சை கேட்கவில்லை.. அதனால், கள்ளக்காதலனை வெட்டி கொன்றுவிட்டார் மருமகன்.

அரிவாள்
இப்போதும் அதேபோல ஒருமகன் அரிவாளை கையில் எடுத்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 13வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்.. 40 வயதாகிறது.. சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை புளியந்தோப்பு கே.எம்.காலனி 13வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு இவர் வந்தபோது 2 பேர் மணிவண்ணனை வழிமறித்து, கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்...இதில் ரத்த வெள்ளத்தில் மணிவண்ணன் சுருண்டு விழுந்தார்..

மருத்துவமனை
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது பின்னந் தலை, வலது தோள்பட்டை, மார்பு என பல இடங்களில் காயங்கள் கிடந்தன.. ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி இருந்தது.. மணிவண்ணனுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. ஆனால் அவரது நிலைமை சீரியஸாக இருப்பதாக கூறப்படுகிறது.. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்..

ஆத்திரம்
அதில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) உள்ள குள்ளா என்பவரின் பெயர் அடிபட்டது.. இவருக்கு 23 வயதாகிறது.. இவரது மாமியார் ஈஸ்வரியுடன் மணிவண்ணன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பிரகாஷூக்கு தெரிந்து பலமுறை இந்த ஜோடியை கண்டித்துள்ளார்.. ஆனால் இருவருமே கேட்கவில்லை போல தெரிகிறது..

கைது
மணிவண்ணன் பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்ததால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தன்னுடைய நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.. சரத்துக்கு 20 வயதுதான் ஆகிறதாம்.. இருவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications