அடேங்கப்பா.. ரூ.3,233 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 5,000 பேருக்கு வேலை.. அசத்திய ஸ்டாலின்
சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் ரூ.3,233 கோடியில் பல்வேறு நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று அவர் சென்னை திரும்பினார். இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கும், ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொழில் ரீதியாகவும், பொருளாதாக ரீதியாகவும் நல்ல உறவு ஏற்படும் வகையில்இந்த பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்கள் என கூறினால் மெட்ரோ, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கூறலாம். இந்த திட்டங்களில் ஜப்பானின் பங்கு உள்ளது.
உற்பத்தி துறையில் ஜப்பான் நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது. அதோடு ஆசிய மையத்தில் மிகப்பெரிய உற்பத்தி தொழில் மையமாக ஜப்பான் விளங்கி வருகிறது. சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தில் மொத்தம் ரூ.3,233 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உயர்கல்வி திறன், தொழில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடம் பிடிப்பதே அரசின் எண்ணமாக உள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன'' என்றார்.












Click it and Unblock the Notifications