இன்னும் எம்பியாக கூட பதவியேற்கவில்லை.. அதற்குள் 'ஸ்வீட் ஷாக்' கொடுத்த எச். வசந்தகுமார்
முதல் சம்பளத்தை ஏழைகளுக்கு வழங்க வசந்தகுமார் எம்பி முடிவு
சென்னை: வழக்கமாக எல்லோரும் ஓட்டுப் போட காசு தருவார்கள்தான். ஆனால் கன்னியாகுமரி தொகுதி எம்பி எச். வசந்தகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். எப்படின்னு பாருங்க!
நாங்குநேரி சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்தான் வசந்தகுமார். லோக்சபா தேர்தல் வந்ததும் எம்எல்ஏ பதவியை விட்டு விட்டு எம்பி பதவிக்கு வந்து விட்டார். பொன் ராதாகிருஷ்ணன் என்ற ஜாம்பவானை ஜஸ்ட் லைக் தட் வீழ்த்தி வெளியேற்றிய பெரும் கோடீஸ்வரர். இப்போது இவர் இன்னொரு அசத்தலான வேலையைச் செய்யவுள்ளார்.
ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வசந்தகுமார். அதாவது தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிடப் போகிறேன். அதுவும் ஏழைகளுக்கும், கல்வி க்காகவும் செலவிடப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுதான் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சம்பளம்
வழக்கமாக ஜெயிப்பதற்காகத்தான் பணத்தை இறக்குவார்கள். ஆனால் வசந்தகுமாரோ ஜெயித்த பிறகு பணத்தை இறக்குகிறார். அதுவும் இன்னும் எம்பியா கூட பதவியேற்கவில்லை. அதற்குள் மக்களுக்காக தனது சம்பளத்தையே ஒதுக்கி விட்டார்.

ஜெயலலிதா
இப்படித்தான் அதிமுகவில் ஒரு எம்எல்ஏ இருந்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிட்டு வந்தார். ஜெயலலிதாவின் அன்பையும், பாராட்டையும் கூட அவர் பெற்றார். செந்தில் பாலாஜி கூட அப்போது இந்த எம்எல்ஏவைப் பார்த்து மிரண்டு போயிருந்தார். இது கடந்த காலம்.

1 லட்சம் ரூபாய்
ஆனால் எச். வசந்தகுமார் தனது மாதச் சம்பளம் ரூ. 1 லட்சத்தை மக்களுக்காக ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இப்போது எம்பிக்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. இதுபோக தொகுதிப் படி 45,000, நாடாளுமன்ற அலுவலக படி ரூ. 45,000, நாடாளுமன்ற கூட்டத் தொடர் படி தினசரி ரூ. 2000 என பெரும் பண மழை பொழியும்.

பாராட்டுக்கள்
இந்த படிகளையும் சேர்த்து மக்களுக்காக செலவிடப் போகிறாரா அல்லது சம்பளம் மட்டும்தானா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நிச்சயம் வசந்தகுமாரின் செயல்பாடும் அறிவிப்பும் பாராட்டுக்குரியது. நல்லது நடந்தால் சரி.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications