சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சாத்தான்குளத்தில்" இருந்த அதே கோபம் "ஆத்தூரிலும்" இருக்கே.. எப்போதும் மாறாத கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகனை போலீஸார் அடித்து கொன்ற போது இருந்த அதே கோபம் தற்போது திமுக ஆட்சியில் ஆத்தூர் அருகே போலீஸாரால் வியாபாரி அடித்து கொல்லப்பட்ட போதும் திமுக எம்பி கனிமொழிக்கு இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அந்த கடையின் உரிமையாளர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்.

போலீஸ் காவலில் இருந்த போது சித்ரவதை செய்யப்பட்டு இருவரும் மரணமடைந்தனர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதில் முக்கியமானவர்களில் கனிமொழியும் ஒருவர். அவர் #Justice For Jeyaraj And Fenix என பொறிக்கப்பட்ட முகமூடியை அணிந்தபடியே சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஜெயராஜ், பெனிக்ஸ்

ஜெயராஜ், பெனிக்ஸ்

சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜும் பெனிக்ஸும் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதையும் கனிமொழி கண்டித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பெனிக்ஸ்

பெனிக்ஸ்

மேலும் ஜெயராஜும் பெனிக்ஸும் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என உறுதியளித்தார்.

திமுக

திமுக

இந்த நிலையில் இது போன்றதொரு சம்பவம் திமுக ஆட்சியிலும் நேற்று நடைபெற்றுள்ளது. சேலம் ஆத்தூர் அருகே முருகேசன் என்ற தொழிலாளி போதையில் பைக்கில் சென்றபோது போலீஸார் அடித்ததால் உயிரிழந்துவிட்டார். திமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தையும் கனிமொழி பாரபட்சமில்லாமல் கண்டித்துள்ளார்.

Recommended Video

    ப்ளீஸ் விட்ருங்க.. அப்பதான் பேசிட்டே இருந்தார் முருகேசன்.. சரமாரி அடி.. மரணம்.. சர்ச்சையில் போலீஸ்
    கோபம்

    கோபம்

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சாமான்ய மக்கள் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோநிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கனிமொழி பதிவிட்டுள்ளார்.

    திமுக

    திமுக

    அதிமுக ஆட்சியாக இருந்தாலும் திமுக ஆட்சியாக இருந்தாலும் தவறு என்றால் அது யார் செய்தாலும் தட்டி கேட்பதிலிருந்து கனிமொழி மாறவே இல்லை என்கிறார்கள். ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக இருக்க இது போன்ற பாரபட்சமற்ற நடவடிக்கை மிகவும் தேவை என்பதுதான் நிதர்சனம்.

    English summary
    MP Kanimozhi expresses her anger in death of Salem Murugesan which she did in Sathankulam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X