ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி விடுமுறை.. கனிமொழி சந்தேகம்
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் டீனாக இருந்தவர் ஜெயந்தி. இவர் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக பேராசிரியர் மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமிக்கப்படுகிறார் என அரசாணை வெளியிட்ட அரசு, அவர் ஏன் மருத்துவ விடுப்பில் சென்றார் என்பதற்காக காரணத்தை கூறவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர். ஜெயந்தி திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.

அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது'' என பதவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications