மகாத்மா காந்தியின் வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசு கொடுப்பதா.. ரவிக்குமார் எம்பி கண்டனம்
சென்னை: மகாத்மா காந்தியின் வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசளிக்கப்படுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான 'மகாத்மா காந்தி அமைதிப் பரிசு' ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1995 இல் உருவாக்கப்பட்ட இந்தப் பரிசு 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், பட்டயமும் கொண்டது. இதற்குமுன் இந்தப் பரிசை நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுட்டு உள்ளிட்ட 18 பேர் பெற்றுள்ளனர்.

12 கோடிக்கும் மேற்பட்ட பகவத் கீதை புத்தகங்களை அச்சிட்டுப் பரப்பியுள்ள இந்தப் பதிப்பகம் 1923 இல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு (2023) அதன் நூற்றாண்டாகும்.
கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா, அந்தப் பதிப்பகம் வெளியிடும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பிரசாத் போதார் ஆகியோர் மகாத்மா காந்தியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள், என்றபோதிலும் கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துகளோடு அவர்கள் உடன்படவில்லை.
1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட நபர்களில் பிரசாத் போதார் மற்றும் கீதா பிரஸ் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா ஆகியோரும் அடங்குவர். அத்தகைய பின்புலம் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு இந்தப் பரிசை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.
கீதா பிரஸின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதியுள்ள அக்ஷய முகுல் அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"பிரிவினைக்கு வழிவகுத்த ஆண்டுகளில், கல்யாண் பத்திரிகையின் பக்கங்கள் மூலம், கீதா பிரஸ் என்னும் பதிப்பகம் இந்து-முஸ்லிம் பிரிவினையை ஊக்குவித்தது, காந்தியை தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் விமர்சித்தது மட்டுமல்லாமல், வகுப்புவாத வெறுப்பையும் தூண்டியது."
"சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், இந்து சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போதும், பசு பாதுகாப்பு இயக்கத்திலும் கீதா பிரஸ் என்னும் பதிப்பகம் மீண்டும் இந்து அமைப்புகளின் வாகனமாக மாறியது. அரசியல் ரீதியாகவும் அது மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டது.ராம் ராஜ்ய பரிஷத், ஹிந்து மகாசபா போன்ற பழமைவாத அமைப்புகளுக்கு வெளிப்படையாக ஆதரவு கோரியது, அத்துடன் கம்யூனிசத்தின் பரவலுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தியது."
"அமைதி, அகிம்சை மற்றும் மனிதத் துன்பங்களைப் போக்க தன்னலமின்றி உழைத்த ஒருவருக்கு, குறிப்பாக சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவர் - அவர் உயர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படலாம்" என இந்தப் பரிசுக்கான தகுதியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு மாறாக அப்பட்டமான பழமைவாத, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்துத்துக்கு மகாத்மா காந்தியடிகளின் பெயரால் உள்ள இந்தப் பரிசை வழங்குவது மகாத்மா காந்தியடிகளையும், மதச்சார்பின்மையையும் ஒருசேர அவமதிப்பதாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரவிக்குமாரை போல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கீதா பிரஸுக்கு காந்தி பரிசு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications