ரயில் விபத்தில் 2 கால்களையும் இழந்து வாடிய ஐடி இளைஞர்..உடனடியாக உதவிய திமுக எம்.பி, .வேலைக்கும் உதவி
சென்னை: ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் ஒருவருக்கு கிரவுட் ஃபண்டிங் மூலம் ரூ 5.24 லட்சம் திரட்டி உதவிய அனைத்து ட்விட்டர்வாசிகளுக்கு திமுக எம்பி செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இளைஞருக்கு ஒரு பணி கிடைக்க யாராவது உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் , இவர் மருத்துவ உதவி, கல்வி உதவி, பண உதவி என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். யாருக்காவது உதவி என்றால் அதை டாக்டர் செந்தில் குமாருக்கு டேக் செய்து கவனத்திற்கு கொண்டு வந்தால் போதும்.

ஃபாலோயர்கள்
எப்படியாவது தன்னால் இயன்ற உதவியை செய்துவிடுவார். மேலும் தனது ஃபாலோயர்ஸிடமும் கேட்டு உதவி வருகிறார். ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் செயலிழந்த நிலையில் இருந்தார்.

கிரவுட் பண்டிங்
இவர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அவர் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டி, அந்த சிறுவன் யார் உதவியும் இன்றி நகருவதற்கான நாற்காலியை வாங்கித் தர உதவினார். அது போல் ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த இளைஞருக்கு உதவுமாறு சமூகவலைதளத்தில் தர்மபுரி எம்பி செந்தில் பதிவிட தற்போது crowdfunding மூலம் 5, 24 ,000 பண உதவி கிடைத்துள்ளது.
|
பணி
இதுகுறித்து ட்விட்டர்வாசிகளுக்கு தருமபுரி எம்பி செந்தில் குமார் நன்றி தெரிவித்துள்ளார். அவரது தனது ட்வீட்டில் தற்போது prosthesis பொருத்தப்பட்டு இரு கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளார். உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என தர்மபுரியில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கால்களை இழந்த அந்த நபர் தனக்கு உதவிய நபர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த தனக்கு தற்போது நடக்க முடிவதால் ஏதேனும் பணி வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செந்தில் குமார் ட்வீட்
இந்த இளைஞரின் கோரிக்கையையும் டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஆதரவும் கிடைத்துள்ளது. தகுதியின் அடிப்படையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணி தர ஒருவர் முன்வந்துள்ளார். தருமபுரி எம்பி செந்தில் குமாரால் அந்த இளைஞருக்கு நடக்க முடிந்த நிலையில் விரைவில் வேலைவாய்ப்பும் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு கால்களையும் இழந்து தன்னம்பிக்கையையும் இழந்த ஒரு இளைஞருக்கு நம்பிக்கை கொடுத்து அவர் நடமாட வழிவகை செய்த தருமபுரி எம்பிக்கும் அந்த இளைஞருக்கு பண உதவி செய்தவர்களுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிகின்றன. நடக்க முடியாமல் ஒரே இடத்தில் இருப்பது என்பது எத்தனை கஷ்டம். இதை உணர்ந்து இளைஞருக்கு உதவிய உள்ளங்களுக்கு நாமும் நன்றி பாராட்டுவோமாக!
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம்












Click it and Unblock the Notifications