ஆர்பி சவுத்ரி கடைசியாக மேடையில் செய்த விஷயம்.. கலங்க வைத்த காட்சி! நிறைவேறாமல் போன ஆசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி திடீர் மறைவு தமிழ் திரை உலகிலேயே உலுக்கி இருக்கிறது. பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவுக்கு வெற்றி படங்களை வழங்கிய அவர், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

R B Choudary Vijay Jiiva Tamil Cinema RB

முன்னணி தயாரிப்பாளரின் பயணம்

தமிழ் சினிமாவில் குடும்பம், சென்டிமென்ட், காமெடி இந்த மூன்றையும் சமநிலைப்படுத்தி படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. அவரது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல தலைமுறைகளும் ரசிக்கும் படங்களை அவர் உருவாக்கினார்.

அவரது தயாரிப்பில் வெளிவந்த நாட்டாமை, சூர்ய வம்சம், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. குறிப்பாக 'பூவே உனக்காக' படம், நடிகர் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

கடைசி நிகழ்ச்சி

சவுத்ரி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி, அவரது மகன் ஜீவா நடித்த "தலைவர் தம்பி தலைமையில்" திரைப்படத்தின் வெற்றி விழா தான்.

அந்த நிகழ்ச்சியில் அவர் தனது பேரனை கை அசைத்து மேடைக்கு அழைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தின் மீது இருந்த பாசமும், அந்த தருணத்தில் இருந்த மகிழ்ச்சியும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

மேலும், ஜீவா பல பேட்டிகளில் தனது தந்தை குறித்து பேசும்போது, "எந்த மனக்கஷ்டம் இருந்தாலும் உடனே அதை மாற்றிவிடுவார் எனக்கும் எங்க அப்பாவுக்கும் 35 வருட இடைவெளி ஆனாலும் அவர் எப்போதும் கூலாக இருப்பார்" என்று கூறியிருந்தது தற்போது ரசிகர்களை மேலும் நெகிழச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் சவுத்ரி பேசும்போது என்னுடைய மகன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டான்.

அவனுக்கு நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஜீவா கன்னத்தில் முத்தம் கொடுத்து இருந்தார். அப்போது ஜீவாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த காட்சிகள் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

நிறைவேறாத கனவு

சவுத்ரியின் வாழ்க்கையில் நிறைவேறாமல் போன ஒரு பெரிய ஆசை பற்றிய தகவலும் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அவர் தனது 100வது படத்தை நடிகர் விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றதால், அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. "அந்த கூட்டணி மீண்டும் நடந்திருந்தால் இன்னொரு வரலாறு உருவாகியிருக்கும்" என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

R B Choudary Vijay Jiiva Tamil Cinema RB

விஜய் - சவுத்ரி உறவு

விஜய்யின் ஆரம்பகால வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளர்களில் சவுத்ரி முக்கியமானவர்.

'பூவே உனக்காக' முதல் பல வெற்றிப் படங்கள் வரை, விஜய்யின் வளர்ச்சியை நேரடியாக பார்த்தவர் சவுத்ரி. அதனால் அவர்களுக்கிடையே இருந்த உறவு வெறும் தொழில்நுட்ப உறவாக இல்லாமல், நெருக்கமான தொடர்பாக இருந்தது.

இந்நிலையில், விஜய் தனது அரசியல் வெற்றியின் நடுவிலும் சவுத்ரியின் மறைவு செய்தியால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என கூறப்படுகிறது.

அஞ்சலி எதிர்பார்ப்பு

சவுத்ரியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் போது, விஜய் நேரில் வந்து மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் கூட, தனது திரை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த நபருக்கு மரியாதை செலுத்துவார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியான ரிசல்ட்டின் போது விஜய் வெற்றி பெற்றதை நடிகர் ஜீவா ரொம்பவும் சந்தோஷத்துடன் விசில் அடித்து கொண்டாடி இருந்தார். ஆனால் இன்று அவர் தந்தையை இழந்து கண்ணீருடன் நிற்கும் காட்சி பார்போரை கலங்க வைத்திருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக மட்டும் அல்லாமல், ஒரு குடும்பத்தின் தலைவனாகவும், பல நடிகர்களின் வளர்ச்சிக்கு காரணமானவராகவும் இருந்த ஆர்.பி. சவுத்ரியின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் படங்கள், நினைவுகள், மற்றும் நிறைவேறாத கனவுகள்-இவை அனைத்தும் அவரை என்றும் ரசிகர்களின் மனதில் உயிருடன் வைத்திருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+