பச்சை துண்டுடன் வந்து பட்ஜெட் வாசித்த எம்ஆர்கே பன்னீர் செல்வம்..என்னென்ன அறிவிப்புகள்
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பச்சைத்துண்டுடன் வந்து பட்ஜெட் வாசித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை: விவசாயிகளின் பெருமையையும் விவசாயத்தின் தேவையையும் எடுத்துக்கூறி அவ்வையாரின் அமுத மொழிகளையும் கூறி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்ஆர்கே பன்னீர் செல்வம். 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.
விவசாயம் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பாடல்களை குறித்து பட்ஜெட் உரையை தொடங்கினார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயத்தை செய்ய வேண்டியுள்ளது. வறட்சி, வெள்ள பாதிப்புகளை தாக்கும் வகையிலான பயிர்களை பயிர் செய்ய நடவடிக்கை
அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறினார்.
மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்து வைத்ததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி மண்ணின் தன்மைக்கேற்ப பயிர்களை பரிந்துரை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.
சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது,119,97,000 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி அதிகரித்துள்ளது.
விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உழவர் சந்தை, கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications