பாரத் நெட் விவகாரத்தில் டம்மியாக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம்.. முதல்வரின் தனிச்செயலாளரானார்
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்று முக ஸ்டாலினிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாரத் நெட் விவகாரத்தில் டம்மியாக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஐஏஏஸ் முதல்வரின் மூன்றாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேற்று, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருங்காட்சியங்கள் ஆணையம்
இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

தொழில்துறை ஆணையர்
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள்.

கையெழுத்து போட மறுப்பு
முதல்வரின் மூன்றாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.எஸ். சண்முகம் தமிழ்நாடு ஃபைபர் நெட் நிர்வாக இயக்குநராக பதவி வகித்தவர் ஆவார். அந்த துறையில் உறுதியான முடிவுகளை எடுத்தவர். 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரியான எம்எஸ் சண்முகம் ஐஏஎஸ், அதிமுக ஆட்சியின் போது பாரத் நெட் விவகாரத்தில் டெண்டரில் கையெழுத்து போட எதிர்ப்பு தெரிவித்தார் என்று அப்போது சொல்லப்பட்டது.

3வது செயலாளராக நியமனம்
இதனால் அவர் அந்த பதவியில் இருநது தூக்கி அடிக்கப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. திமுக தலைவர்கள் ஐபெரியசாமி உள்பட முக்கிய தலைவர்கள் எம்எஸ் சண்முகம் டம்மியாக அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராக மாற்றப்பட்டது குறித்து அப்போதே கேள்வி எழுப்பி இருந்தார்கள் இந்நிலையில் எம்எஸ் சண்முகம் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரகாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications