சென்னையில் மேடவாக்கம் டூ கூட்ரோடு பக்கம் போறீங்களா.. ரொம்ப கவனம்.. மொத்தமாக எல்லாமே மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது சென்னை மாநகர பேருந்து கழகம். இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால். அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

metro

தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து
நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

மாற்றம் எப்படி?: தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பணிகள் தொடக்கம்: இது போக பல மாதங்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் இறுதியாக சோழிங்கநல்லூர் மற்றும் சிப்காட் இடையிலான மீண்டும் பணியைத் தொடங்கி உள்ளது.

இந்தப் பாதையில் பணியை மேற்கொள்வதற்காக புதிய துணை ஒப்பந்ததாரர் சார்பான சில நாட்களுக்கு முன்புதான் இங்கே தொடக்க விழா நடதப்பட்டது. இங்கே முழு அளவிலான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று CMRL அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயிலின் OMR இன் ஒரு பகுதியின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகள் இறுதியாக மீண்டும் தொடங்கப்பட உள்ளன. ₹61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் தற்போது பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன.

காரிடார் 3 நகரின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், OMR இன் கணிசமான பகுதி வழியாகவும், தரமணியிலிருந்து SIPCOT வரை செல்கிறது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் இடையே பணி சில காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் துணை ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ஒன்று நிறுத்தப்பட்டதால், பணியும் பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்தப் பாதையில் பணியை மேற்கொள்ளும் புதிய துணை ஒப்பந்ததாரர், சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறிய விழாவை நடத்தினார், மேலும் முழு அளவிலான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அடுத்த சில நாட்களில் பைலிங் ரிக் போன்ற கூடுதல் உபகரணங்கள் வரும் வேலை வேகம் பெற சிறிது நேரம் எடுக்கும், ஆனால் அது தொடங்கிவிட்டது, இனி இந்த பாதையில் சிக்கல்களை எதிர்பார்க்கவில்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+