முகூர்த்த தினம்.. இன்று, நாளை பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க
சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான இன்று (07.11.2024) மற்றும் நாளை (08.11.2024) ஆகிய 2 நாட்கள் அனைத்து சார்பதிவாளர் அலவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் சுபமுகூர்த்த தினத்தில் பொதுமக்கள் புதிய சொத்துகளை வாங்குவதிலும், பத்திரப்பதிவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுபமுகூர்த்த தினங்களில் சொத்துகள் வாங்கும்போது செல்வம் பெருகி சொத்துகள் குவியும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதனால் தான் ஒவ்வொரு முகூர்த்த தினங்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் என்பது அலைமோதும். அந்த வகையில் இன்று (நவம்பர் 7), நாளை (நவம்பர் 8) ஆகிய நாட்கள் சுபமுகூர்த்த தினங்களாக உள்ளன. இதையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழக பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்ளில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அதேபோல் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications