கேட்கவே சிலிர்க்குதே! தனது அலுவலக ஊழியருக்கு ரூ.1500 கோடிக்கு வீடு வாங்கி தந்த அம்பானி! ஏன் தெரியுமா
சென்னை: தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு முகேஷ் அம்பானி ரூ. 1500 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
உலகில் இருக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருக்கிறார்.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானி. கவுதம் அதானி 2014க்கு பின் மிக வேகமாக வளர்ந்தார்.

இந்த வளர்ச்சி காரணமாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்பதில் இருந்து முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டார். ஆனால் முகேஷ் அம்பானிக்கு பங்குகள் மூலமாக மட்டுமின்றி உண்மையில் பல்வேறு சொத்துக்கள் இருக்கின்றன.
பங்குகள் ரீதியாக அதானி பெரிய ஆளாக இருந்தாலும் முகேஷ் அம்பானிதான் நிஜத்தில் பெரிய பணக்காரர் என்று மதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அம்பானி வெறும் பேப்பர் பணக்காரர் மட்டும் கிடையாது. இந்தியாவில் முகேஷ் அம்பானி இல்லாத துறையே கிடையாது என்று சொல்ல முடியும்.
டெலிகாம் துறை, எரிபொருள் துறை, மின்சாரத்துறை, அழகுசாதன பொருட்கள் துறை, ஜவுளி துறை, டயமண்ட் துறை, கடிகார உற்பத்தி, ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் என்று எல்லா துறைகளிலும் முகேஷ் அம்பானி குழுமம் உச்சத்தில் உள்ளது. அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும்.
இவர்களின் அண்டிலியா வீடுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட நிகழ்கால வீடு ஆகும். . அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இந்த வீடுதான் முதலிடம் பிடித்தது.
இதை கட்ட மட்டும் 60 மில்லியன் டாலர் செலவு ஆனது. உலகில் மிகவும் அதிக தொகையில் கட்டப்பட்ட வீடுகளில் இதுவும் ஒன்றாகும். இப்படிப்பட்ட நிலையில்தான் முகேஷ் அம்பானி தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு ரூ. 1500 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

வீடு: மனோஜ் மோடி என்ற ஊழியருக்கு இவர் இந்த வீட்டை வாங்கி கொடுத்துள்ளார். அவர் வெறும் ஊழியர் மட்டுமின்றி முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர். அவர்கள் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். அதோடு முகேஷ் அம்பானியின் இடது கை என்றும் கூறப்படும் நபர்.
முகேஷ் அம்பானி எடுக்கும் பல்வேறு முடிவுகளில் மனோஜ் மோடியின் ஆலோசனை இருக்கும். மனோஜ் மோடியின் அறிவுரையை கேட்டுத்தான் முகேஷ் அம்பானி செயல்பட்டு வருகிறார். இவர் சொல்வதை கேட்டுத்தான் இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் பலவற்றை அம்பானி எடுத்தார்.
அம்பானி பல கோடிகளை ஈட்ட மனோஜ் மோடி முக்கிய காரணமாக இருந்தார். இதற்கு கைமாறாக , அம்பானி மோடிக்கு 22-மாடி கட்டிடத்தை பரிசளித்தார.,மும்பையில் உள்ள பிரீமியம் லோகாலிட்டியான நேபியன் சீ ரோட்டில் இந்த சொத்து உள்ளது.

தன்னிடம் பெரிய வங்கி கணக்கு மட்டுமல்ல பெரிய மனசும் இருக்கிறது என்று நிரூபிக்கும் விதமாக இந்த வீட்டை அம்பானி வாங்கி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் உள்ள தனது இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை மனோஜ் மோடி விற்றுள்ளார். இந்த குடியிருப்புகளின் விலை ரூ.41.5 கோடி என பதிவு ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது. இரண்டும் முமபையில் உள்ள ரஹேஜா விவேரியாவில் அமைந்துள்ளன, ஒன்று 28வது மாடியில் சுமார் 2,597 சதுர அடி பரப்பளவில் அமைந்து உள்ளது. மற்றொன்று 29வது மாடியில் உள்ளது.
இந்த வீடுகளை அவர் விற்ற நிலையில் அம்பானி புதிய வீடு வாங்கி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications