வங்கி அதிகாரிகளுக்கே விபூதி அடித்த தம்பதி! ஒரே வீட்டு பத்திரத்தை வைத்து இத்தனை லீலைகளா?
சென்னை: கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், கைதான தம்பதியிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது நங்கநல்லூரில்?
சென்னை குரோம்பேட்டை ம.பொ.சி நகரை சேர்ந்தவர் பிரதீப்குமார்.. இவரது மனைவி ரஞ்சனி.. இவர்களுக்கு சொந்தமான ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு பிரதீப்குமார் மற்றும் ரஞ்சனி தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பத்திரத்தை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்துள்ளனர். அந்தப் பத்திரத்தின் அடிப்படையில் அவர்கள் 3 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளனர்.
அசல் பத்திரம் - அடமானம்
ஆனால், கடன் பெற்று நீண்ட காலத்திற்கு பிறகும் அவர்கள் அசலையோ அல்லது வட்டியையோ முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக கடன் தொகை நிலுவையில் இருந்ததால், கூட்டுறவு சங்க நிர்வாகம் அந்த வீட்டை ஏலத்திற்கு கொண்டு வர முடிவு செய்தது. இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டது..
அப்போது அந்த சொத்தின் மீது வில்லங்க சான்றிதழை சரிபார்த்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது பிரதீப்குமார் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பை ஏற்கனவே தனது சகோதரிக்கு விற்பனை செய்திருப்பது வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவந்தது.
மோசடி இத்துடன் முடிவடைந்து விடவில்லை. அந்த தம்பதியினர் அதே வீட்டு பத்திரத்தை பயன்படுத்தி தேனாம்பேட்டையில் உள்ள இன்னொரு வங்கியிலும் கடன் வாங்கியிருக்கிறார்கள்.. அங்கேயும் அவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை.
கூட்டுறவு வங்கி லோன்
இதனால் சம்பந்தப்பட்ட வங்கி, அந்த வீட்டை ஏற்கனவே ஏலத்தில் விட்டுள்ளது. அந்த ஏலத்தின் மூலம் மூன்றாம் நபர் ஒருவர் அந்த வீட்டை விலைக்கு வாங்கி தனது வசப்படுத்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
மோசடி இத்துடன் முடிவடைந்து விடவில்லை. இப்படி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மற்றும் இன்னொரு வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை, போலி ஆவணங்கள் மூலம் நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்திலும் அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது அம்பலமானது.
இது குறித்து நங்கநல்லூர் கூட்டுறவு சங்கச் செயல் அலுவலர் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் விரிவான புகார் ஒன்றை அளித்தார்.
வீட்டு பத்திரம் - ஏலம்
அந்தப் புகாரின் அடிப்படையில் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்..
அப்போதுதான் ஒரே வீட்டை இத்தனை முறை விற்று, இத்தனை முறை அடமானம் வைத்து, பணம் பறித்ததையறிந்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..
தலைமறைவாக இருந்த 59 வயதான பிரதீப்குமார் மற்றும் 49 வயதான ரஞ்சனி ஆகியோரை போலீசார் கண்டுபிடித்து கைதும் செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் பிரதீப்குமாரின் சகோதரியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு சொத்தை வைத்து பல இடங்களில் ஏமாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசல் ஆவணங்கள் - விழிப்புணர்வு
சொத்து பரிமாற்றங்களில் போலி ஆவணங்கள் மூலம் பலமுறை கடன் பெற்று ஏமாற்ற வாய்ப்புள்ளதால், வில்லங்க சான்றிதழை முழுமையாகச் சரிபார்ப்பது மிக அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அசல் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பணப் பரிவர்த்தனை செய்வது மிகப்பெரிய நிதி இழப்பிற்கு வழிவகுக்கும்.
அதேபோல வங்கிகளும் தனிநபர்களும் சட்ட வல்லுநர்கள் மூலம் சொத்தின் வரலாற்றை ஆராய்ந்து, அதில் மறைமுக அடமானங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... விழிப்புணர்வுடன் ஆவணங்களை கையாள்வது மட்டுமே இதுபோன்ற திட்டமிட்ட பணமோசடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது...!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications