சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்வி கங்காபூர்வாலா நியமனம்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. யார் இவர்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்வி காங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அவரை பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்நிலையில் தான் எஸ்வி கங்காபூர்வாலா யார்? என்ற பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்த கொலிஜியத்தின் பரிந்துரை மத்திய அரசு மூலம் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் குறிப்பிட்ட நீதிபதியின் நியமனம், பணி இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவை செயல்பாட்டு வரும். தற்போது இந்தியாவில் ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி இருந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிதாக தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்பட்டு வந்தார். இவரும் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து டி ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய நிலையில் ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி அவசியமானது. இதற்கிடையே தான் ஒடிசா தலைமை நீதிபதி முரளிதர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் இது நடக்கவில்லை.
மாறாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு எஸ்வி கங்காபூர்வாலாவை நியமிக்க பரிந்துரை செய்து உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்வி கங்காபூர்வாலாவின் நியமனம் உறுதியாகி உள்ளது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications