குளியலறையில் பெண்ணின் உடம்பு பூரா வெள்ளி நகை! கிட்ட பார்த்தால்? சினிமாவிலும் நடக்காத மும்பை சம்பவம்
சென்னை: வீடு ஏதாவது வாடகைக்கு இருக்கிறதா? என்று கேட்க வந்த நபரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டு, விசாரணையும் மேற்கொண்டபோதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. சம்பந்தப்பட்டவரிடம் போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.. பலரையும் வியக்க வைத்துள்ள இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி.. 27 வயதாகிறது.. இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று நிஷா வீட்டில் இல்லை.. அவரது மாமியார் மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.. அப்போது யாரோ வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறார்கள்.. இதனால் நிஷாவின் மாமியார் வெளியே சென்று கதவை திறந்து பார்த்துள்ளார்..
வாடகைக்கு வீடு
அப்போது வாசலில் நின்றிருந்த நபர், இங்கே வீடு ஏதேனும் வாடகைக்கு இருக்கிறதா? என்று கேட்டுள்ளார்.. அப்படி எதுவும் இல்லையே என்று மாமியார் சொல்லவும், மெல்ல பேச்சு தந்த அந்த நபர், சிறிது நேரத்தில், பாத்ரூம் போகணும்.. உங்க வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? அனுமதி கேட்டுள்ளார்.. உடனே மாமியாரும் சரியென்று சொல்லி பாத்ரூம் இருக்கும் இடத்தை காட்டியிருக்கிறார்..
குளியலறையில் அலறிய மாமியார்
பாத்ரூமுக்குள் சென்ற நபர், குழாயில் தண்ணீர் கசிவு இருக்கிறதே என்று சொல்லியிருக்கிறார்.. அப்படியா? என்று பாத்ரூமுக்குள் நுழைந்து சென்று பார்த்துள்ளார் மாமியார்.. உடனே அந்த நபர், பாத்ரூம் உள்ளேயே மாமியாரை வைத்து பூட்டிவிட்டு, வீட்டிலிருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து விட்டார். இதை கொஞ்சமும் எதிர்பாராத மாமியார், பாத்ரூமுக்குள்ளிருந்தே கத்தி கூச்சலிட்டார்..
அவரது சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்... அப்போதுதான் வீட்டிலிருந்த நகைகள் திருடுபோயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசாரும், வழக்குப்பதிவு செய்து இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்..
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
அதில், தாடி வைத்த நபர் ஒருவர், நிஷாவின் மாமியார் வீட்டுக்கு சென்றது பதிவாகியிருந்தது.. இதனால், வேறு பகுதியிலிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.. அதே நபர், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது பதிவாகியிருந்தது.. அப்போது திடீரென தன்னுடைய முகத்திலிருந்த தாடியை பிய்த்து எடுத்தார்.. பிறகு, தன்னுடைய பேன்ட், சட்டைகளையும் அவிழ்த்தார்.. பிறகுதான் தெரிந்தது, அந்த நபர், உண்மையிலேயே பெண் ஆவார்.
ரயிலில் ஏறிய அந்த பெண், குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் இறங்கி சென்றதையும் போலீசார் கண்டறிந்து, அதிர்ச்சியடைந்தனர்.. பிறகு சம்பந்தப்பட்ட பெண் நிஷா குடும்பத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவரா? என்பதை அறிந்து கொள்ள, மேற்கண்ட 2 சிசிடிவி வீடியோக்களையும், நிஷாவிடம் கொண்டுவந்து அடையாளம் காட்டினர் போலீசார்.
அடுத்த அதிர்ச்சி தகவல்
வீடியோவை பார்த்த நிஷா, அந்த பெண் தன்னுடைய சகோதரி ஜோதி பனுசாலி என்றார்.. இதைக்கேட்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.. அப்போதுதான் பகீர் தகவல்களை அந்த பெண் போலீசாரிடம் கூறினார்..
அதாவது, ஷேர் மார்க்கெட்டில் 30 லட்சம் ரூபாயை இழந்துவிட்டாராம்.. இதனால் தன்னுடைய நகைகளும் அடகு வைத்துவிட்டாராம் ஜோதி.. அந்த அடகு நகைகளை மீட்பதற்காகவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தந்தார்..
1.5 கோடி தங்கம், வெள்ளி நகைகள்
இதையடுத்து, நிஷா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அப்பெண்ணிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.. அத்துடன் கொள்ளையடித்த பெண் ஜோதியையும் கைது செய்தனர்.. அதாவது கொள்ளை நடந்து 12 மணி நேரத்திலேயே, குற்றவாளி ஜோதியை போலீசார் கைது செய்துவிட்டனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications