கேட்டதை கொடுக்காமல்! திருச்சியில் வார்த்தைகளால் வடை! வெறுங்கையில் முழம்! பிரதமர் மீது முரசொலி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள நிவாரண பணிகளில் கேட்டதை கொடுக்காமல் திருச்சியில் பிரதமர் வார்த்தைகளால் வடை சுட்டுவிட்டு சென்றார் என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: வைத்த கோரிக்கைகள் எதற்கும் பதில் சொல்லாமல் கேட்ட தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போட்டு வார்த்தைகளால் வடை சுட்டு விட்டுச் சென்று விட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். கடந்த மாதம் பெய்த மழையை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்­நாட்டு மக்­கள் சார்­பாக கோரிக்கை வைத்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

Murasoli mouthpiece criticises PM Modi

சென்­னை­யைச் சுற்­றிய மாவட்­டங்­க­ளில் மழை பெய்து வெள்­ளம் ஆக்­கி­யது டிசம்­பர் 3 ஆம் தேதி ஆகும். ஒரு மாதம் ஆகப் போகி­றது. தென் மாவட்­டங்­க­ளில் மழை பெய்து வெள்­ளம் ஆக்­கி­யது டிசம்­பர் 17,18 தேதி­கள் ஆகும். இரண்டு வாரங்­கள் முடிந்­து­விட்­டது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­களில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத் தொகை­யாக 7033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத் தொகை­யாக 12,659 கோடி ரூபா­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரி உள்­ளார்­கள்.

திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக ரூ.2 ஆயி­ரம் கோடி தர­வேண்­டும் என்­றும் முதல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கோரி­யுள்­ளார்­கள். ஆக மொத்­தம் 21 ஆயி­ரத்து 692 கோடி ரூபாய் தமிழ்­நாடு அர­சால் ஒன்­றிய அர­சி­டம் கேட்­கப்­பட்­டுள்­ளது. பிர­த­மர் அவர்­க­ளி­டம் டெல்லி சென்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வைத்த கோரிக்கை இது. கடந்த டிசம்­பர் 19 ஆம் தேதி அன்று இந்த கோரிக்கை வைக்­கப்­பட்­டது. கோரிக்கை வைத்து இரண்டு வாரங்­கள் ஆகப் போகி­றது. ஒன்­றிய நிதி அமைச்­சர் இங்கு வந்து பார்த்­துச் சென்­றார். அவ­ரி­ட­மும் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. ஒன்­றி­யக் குழு மூன்று நாட்­கள் தங்கி ஆய்வை நடத்­தி­யது. அவர்­க­ளி­ட­மும் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தக் கோரிக்­கை­களை வைத்­தார்.

ஆனால் இது­வரை முத­லில் 450 கோடி ரூபா­யும், பின்­னர் 450 கோடி ரூபா­யும் ஒன்­றிய அர­சி­டம் இருந்து தரப்­பட்­டது. இது­வும் வழக்­க­மாக வரும் நிதி தானே தவிர, இப்­போது ஏற்­பட்ட புயல் --- மழை -- வெள்­ளச் சேதங்­க­ளில் இருந்து மீட்­கத் தரப்­பட்ட சிறப்பு நிதி அல்ல.

இயற்­கைப் பேரி­டர்­க­ளால் ஏற்­ப­டும் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக ஒவ்­வொரு மாநி­லத்­திற்­கும் மாநி­லப் பேரி­டர் நிவா­ரண நிதி (SDRF) என்ற நிதி உள்­ளது. எந்­தெந்த மாநி­லத்­திற்குஇந்த நிதி எவ்­வ­ளவு என்­பதை ஐந்­தாண்டு காலத்­திற்கு ஒரு­முறை ஒன்­றிய அர­சால் நிய­மிக்­கப்­ப­டும் நிதிக் குழு (Finance Commission) தீர்­மா­னிக்­கி­றது. இதன்­படி, தமிழ்­நாட்­டி­னு­டைய SDRF--க்கு ஒவ்­வொரு ஆண்­டும் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்­காட்டை, அதா­வது 900 கோடி ரூபாயை ஒன்­றிய அரசு தர­வேண்­டும். 25 விழுக்­காட்டை, அதா­வது 300 கோடி ரூபாயை தமிழ்­நாடு அரசு ஏற்­றி­ட­வேண்­டும்.

ஒன்­றிய அர­சின் பங்­கா­னது ஆண்­டு­தோ­றும் இரு தவ­ணை­க­ளில் நமக்கு அளிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்­கப்­ப­டும். அதில் இருந்து தான் இப்­போது நிதி கொடுத்­துள்­ளார்­கள். ஒரு இயற்­கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 900 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRFக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதும், அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் தமிழ்நாட்டுக்கு பார்க்க வரவில்லை. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போதும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் போய் பார்க்கவில்லை. குஜராத் மாநிலத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே அறிவிக்கிறார். ஆனால் தமிழ்­நாடு ஒரு மாத காலமாக தட்டேந்தி நிற்கிறது. அது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஒன்­றிய அர­சி­டம் பேரி­டர் நிவா­ர­ணத் தொகை­யாக 68 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி இருக்­கி­றது. அதில் இருந்து தான் கேட்­கி­றோம். கொடுக்க மன­மில்லை. அத­னால் அவர்­கள் கொடுக்­க­வில்லை.

ஆனால், 'காங்­கி­ரஸ் ஆட்­சியை விட இரண்­டரை மடங்கு அதி­க­மாக பா.ஜ.க. அரசு தமிழ்­நாட்­டுக்கு நிதி கொடுத்­த­தாக' திருச்சி கூட்­டத்­தில் பிர­த­மர் பேசி இருக்­கி­றார். ஒரே ஒரு திட்­டத்­துக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டதை மட்­டும் பார்ப்­போம். மெட்ரோ ரயில் திட்­டம் ஒன்­றிய அர­சின் சாத­னை­யா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. 2018 முதல் 2023 வரைக்­கும் 6 ஆண்டு காலத்­தில் தமிழ்­நாட்­டின்மெட்ரோ ரயில் திட்­டத்­துக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 3 ஆயி­ரத்து 273 கோடி ரூபாய்.

மற்ற மாநி­லங்­க­ளுக்கு பாருங்­கள்...

• மகா­ராஷ்­டிரா ரூ.28,493 கோடி

• கர்­நா­டகா ரூ.17,532 கோடி

•டெல்லி, உபி ரூ.16,189 கோடி

•டெல்லி, உபி, அரி­யானா ரூ.13,424 கோடி

•மேற்கு வங்­கம் ரூ.13,109 கோடி

•குஜ­ராத் ரூ.12,897 கோடி

• உ.பி. ரூ.11,565 கோடி--- இவற்­றை­யும் பாருங்­கள். தமிழ்­நாட்­டை­யும் பாருங்­கள். ஏன் அந்த மாநி­லங்­க­ளுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது என்று நாம் கேட்­க­வில்லை. தமிழ்­நாடு ஏன் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றது என்று தான் கேட்­கி­றோம். பா.ஜ.க. வைத்­துள்ள வரை­ப­டத்­தில் தமிழ்­நாடு ஏன் இல்லை என்று தான் கேட்­கி­றோம்.

"பரந்து விரிந்த இந்­தி­யப் பெரு­நாட்­டில் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளுக்குநெருக்­க­மாக இருந்து, கல்வி - - மருத்­து­வம் -- அவ­சி­யத் தேவை­கள் -- உத­வி­கள்ஆகி­ய­வற்றை செய்து தர வேண்­டிய முக்­கி­யக் கடமை மாநில அர­சு­க­ளுக்­குத்­தான் இருக்­கி­றது. மாநி­லத்­திற்­காக கோரிக்கை வைப்­ப­தும் -- மாநில உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தும் அங்கு வாழும் மக்­க­ளின் கோரி­கை­கள்­தானே தவிர, அவை, 'அர­சி­யல் முழக்­கங்­கள்' அல்ல." என்­ப­தை­யும் பிர­த­ம­ருக்கு முன்­னால் சொல்லி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள். இவை பிர­த­ம­ருக்கு புரி­யுமா எனத் தெரி­ய­வில்லை. வரு­கிற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் புரிய வைப்­பார்­கள் என்­பது தெரி­கி­றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+