பிராமணர் “சுப்ரீம்” பேச்சு.. புள்ளிவிபரம் சொல்லுதே! ஜேம்ஸ் வசந்தன் அந்த அர்த்தத்தில் எழுதவில்லையாம்
பிராமணர் குறித்த ஜேம்ஸ் வசந்தன் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், அனைத்து துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குவதாக புள்ளி விபரம் சொல்வதாக தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பிராமணர்கள் குறித்து நடிகர் பாஸ்கி பேசிய சர்ச்சை கருத்தை ஆதரித்ததற்காக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை பலர் கடுமையாக விமர்சித்த நிலையில் அது குறித்து 5 புள்ளிகளில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அனைத்து துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குவதாக புள்ளி விபரம் சொல்வதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கடந்த 4 நாட்களுக்கு முன்பாக பிராமணர்களுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளானது.
"பிராமணர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பதும், விமர்சிப்பதும் கூட தீண்டாமைதான்." என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

பாஸ்கிக்கு ஆதரவு
இந்த நிலையில் உலகிலேயே உயர்ந்த சாதியினர் பிராமணர்கள்தான் என்று நடிகர் பாஸ்கி பேசியதில் மாற்றுக்கருத்து இல்லை என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இதற்கும் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனை அடுத்து அவர் நீண்ட பதிவு ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டு விளக்கமளித்தார்.

இரட்டை குவளை முறை
"தமிழ்நாட்டில் பல ஊர்களில், கடைகளில் இன்னும் இருவேறு தேநீர்க் குவளைகளைப் பயன்படுத்துகிறார்களே, கோயிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே, ஊருக்குள் வரக்கூடாது என்கிறார்களே.. இப்படி ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா?
இங்கு கருத்துப் பதிவிடும் பலர் சாதிவெறிக்குள் உழல்பவர்தானே? நீங்கள் எப்படி மற்றவரை விமர்சிக்க முடியும்?" என்று பதிவிட்டார்.

மீண்டும் விளக்கம்
அதிலும் அவர் தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று மீண்டும் தனது நிலைபாட்டை விளக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். "தமிழ்ச் சமூகத்தின் மேல் உண்மையான அக்கறை கொண்ட சில சமூகப் போராளிகள் அண்மையில் நான் தெரிவித்த ஒரு கருத்தைக் குறித்து என்னிடம் நேரடியாகவேப் பேசினார்கள்.

பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை
அது சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம், அதனால் அதை தெளிவாக்கினால் நலம் என்றனர். அது சரியென்பதை நான் உணர்ந்து கீழ்க்கண்ட என் நிலைப்பாட்டினை சுருக்கமாகத் தெரிவிக்கிறேன்.
1. பிறப்பினால் ஒருவவன் மேன்மையாகவோ தாழ்மையாகவோ இருக்கமுடியாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'சாதி இரண்டொழிய வேறில்லை' ' இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என் ஆழ்ந்த நம்பிக்கைகள்.

புள்ளிவிபரம் சொல்கிறது
2. 'படைப்புத் திறனில் அவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்' என்பதை புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் நான் ஏற்கிறேன். மரபணு அடிப்படையில் அல்ல. அவர்கள் ஏன், எப்படி சிறந்தனர் என்பது வேறு விவாதம்.
3. மனிதரில் பேதங்கள் உண்டு என்றவர் அவர். எல்லாரும் சமம் என்பவர் நாம். அந்தப் பழமையான காட்டுமிராண்டிக் கொள்கையை இன்றும் நியாயப்படுத்துகிற இளைஞரும் உண்டும் என்பதை நான் அறிவேன். அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பவன் நான். அவர்கள் சேர்க்கையை விட்டு ஒதுங்கியிருக்கிறேன்.

ரசிகர்கள் மனப்பான்மை
4. பல நூற்றாண்டு உரிமை பறிப்பின் காரணமாக ஒடுக்கப்பட்ட நம் மக்கள் 'இட ஒதுக்கீடு' மூலம் மட்டுமே சமதளத்தை அடையமுடியும். அந்தத் தளத்தை அடைய நம் இளைஞரில் பலர் இன்னும் முனைப்பின்றி இருக்கின்றனர் என்கிற வேதனை இன்னொரு புறம்.
5. கட்-அவுட் வைப்பதிலும், முதல் காட்சிக்கு அடித்துக்கொண்டு சாவதையும் விட்டுவிட்டு, வாழ்க்கை இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி கடுமையாக உழைக்காவிடில் இன்றிருக்கிற அந்தப் புள்ளிவிவரம் என்றுமே மாறாது என்கிற அச்சத்தின் வெளிப்பாடுதான் என் பகிர்வுகள்." என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications