வக்பு வாரிய திருத்த சட்டம்.. திமுக எதிர்ப்பது ஏன்? காரணங்களை அடுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வக்பு சட்டமானது 1954ஆம் ஆண்டு இயற்றப்பட்டது, இந்த சட்டத்தில் 1995 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக முன் வரவினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
எதிர்க்க காரணங்கள் என்ன?
வக்பு வாரியத்தில் அரசின் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தில் இருந்ததால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம். எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பினார்கள். இந்த சட்டத்தை எதிர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்
வக்பு சட்டத்தை இயற்றுவதன் மூலமாக மத்திய வக்பு கமிஷன் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும். அதேபோல் வக்பு நிலங்களை நில அளவீடு செய்யும் அதிகாரம், நில அளவை ஆணையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது.
2 பிரிவினருக்கு தனி சொத்து வாரியம்
இதன் மூலமாக வக்பு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம், வக்பு வாரியங்களிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் முஸ்லீம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளை செல்லாததாக மாற்ற முடியும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இஸ்லாமிய மக்களின் 2 குறிப்பிட்ட வகுப்புகளுக்கு தனி சொத்து வாரியம் உருவாக்கும் முயற்சியாகும்.
முஸ்லீம் அல்லாதவர்கள்
மாநில வக்பு வாரியத்திற்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான தேர்தல் முறை ரத்து செய்யப்படுகிறது. மாநில வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத 2 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது இஸ்லாமியர்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். வக்பு சொத்துகளை பதிவு செய்யும் முன், மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்றும் சொல்கிறது.
இஸ்லாமியர்கள் அச்சம்
இதன் மூலமாக வக்பு சொத்துகளை அரசு கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இஸ்லாமியர்களின் மத உரிமையை பாதிப்பதாகவும் இருக்கிறது.
திமுக எதிர்ப்பு
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக மற்றும் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இதனால் எந்த நேரத்தில் வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம்.
வக்பு வாரியத்தையே முடக்கும் அபாயம்
இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் சட்டத்தை எதிர்த்து நமது எதிர்ப்பை பதிவு செய்வது அவசிய அவசரம். சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியமைப்புக்கு எதிரான, நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணான தேவையற்ற பிரிவுகள் வக்பு திருத்த சட்டத்தில் இருக்கின்றன. இந்த திருத்த சட்டம் வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும்.
மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
இதனால் எதிர்க்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்காக தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவரவரது மதங்களை பின்பற்றும் உரிமையை அரசியமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. அதனை பேணி காக்கும் கடமை அரசுக்கு உள்ளது.
ஆனால் அதற்கு மாறாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்துவதற்கு கடந்த 2024ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த வக்பு வாரிய திருத்த சட்ட முன் வடிவினை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்!












Click it and Unblock the Notifications