நிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்
Recommended Video
சென்னை: நிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று என சடட்சபை நோக்கி முஸ்லீம்கள் பேரணியில் முழக்கங்கள் விண்ணை பிளந்தன.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் போராட்டத்தின் போது போலீஸார் தடியடி நடத்தியதில் ஏராளமான முஸ்லீம்கள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த தடியடியை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று 6ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டசபையை முற்றுகையிடும் பேரணி இன்று நடந்து வருகிறது.

இதில் கலைவாணர் அரங்கிலிருந்து பேரணியாக சென்று சட்டசபையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அதன்படி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வாலாஜா சாலையில் திரண்டனர்.
முற்றுகைப் போராட்டத்துக்கு தேசியக் கொடியுடன் வந்துள்ள இஸ்லாமியர்கள் சிஏஏ சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
சட்டசபை நோக்கி தொடங்கிய பேரணியில் நிறைவேற்று, நிறைவேற்று, சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று என கோஷமிட்டனர். அது போல் பாஜக ஆளாத மாநிலம் எல்லாம் சிஏஏவை எதிர்க்கிறதே, தமிழகம் ஏன் எதிர்க்கவில்லை எனவும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications