64 நாட்கள் கடலில் பசியில் தத்தளித்த மியான்மர் மீனவர்... நெகிழவைத்த சென்னை காசிமேடு மீனவர்களின் பாசம்
சென்னை: சென்னை காசிமேடு சி.ஜி.காலனியை சேர்ந்த மீனவர்கள், . மாமல்லபுரம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மூங்கில் படகு ஒன்று வந்தது. அந்த படகில் இருந்த மீனவர் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க குரல் எழுப்பினார். இதை பார்த்து அருகில்போன மீனவர்கள், அந்த படகில் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் மூங்கில் படகில் 64 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்தது தெரியவந்தது. அவரை காசிமேடு மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தார்கள்.
சென்னை காசிமேடு சி.ஜி.காலனியை சேர்ந்த 42 வயதாகும் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். மாமல்லபுரம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்கு மூங்கில் படகு ஒன்று மிதந்து வந்து கொண்டு இருந்தது. அதில் இருந்த ஒருவர் சைகை மூலம் கையசைத்து, கொடி அசைத்து காட்டி உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்ர்.

இதைப்பார்த்த மீனவர்கள் மூங்கில் படகு அருகில் சென்று பார்த்தனர். அவர் கையெடுத்து கும்பிட்டு எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். இதையடுத்து உடனடியாக காசிமேடு மீனவர்கள், அவரை காப்பாற்றி தங்களது விசைப்படகில் ஏற்றிக்கொண்டனர். அவர் வந்த மூங்கில் படகை தங்குளுடைய விசைப்படகில் கட்டினார்கள் மீனவர்கள். பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தார்கள்.
இதுபற்றி மீனவர்கள், கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் மியான்மர் நாட்டை சேர்ந்த 37 வயதாகும் ஷான் மா என்பது தெரியவந்தது. ஷான் மா மியான்மர் நாட்டில் மூங்கில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தில் படகு, வழி தவறி நடுகடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது தெரியவந்தது.
கடல் காற்றாலும், நீரோட்டம் செல்லும் திசையிலும் அவரது மூங்கில் படகு சென்றது. இதனால் அவர் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 64 நாட்கள் மூங்கில் படகில் நடுக்கடலில் தவித்திருக்கிறார். மேலும் விசாரணையில் அவரது மூங்கில் படகில் கடத்தல் பொருட்கள் எதுவும் இல்லாததையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். அவரைப் பற்றிய விவரங்கள் மியான்மர் நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஷான் மாவை மீன்பிடி துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில, 64 நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர், படகில் இருந்த உணவு, தண்ணீர் காலியானதால் மழைநீரை தண்ணீராக குடித்தும், கடலில் ஆமையை பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார. அவரை மீட்ட நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். அதை வேண்டாம் என்று கூறிவிட்டு டீ, காபி பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டார் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications