மோசமான கோலத்தில் ஜிம்முக்குள் நுழைந்த நபர்.. வாயிலேயே பளார்னு விட்ட "நைட்டி" பெண்.. பரபர மயிலாப்பூர்

அரைநிர்வாண கோலத்தில் ஜிம்மில் புகுந்து அட்டகாசம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரைநிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவர் ஜிம்மில் நுழைந்து தகராறு செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

மயிலாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பாஷா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லாஹ்... இவர் ஒரு ரவுடி.. இவர் மீது ஏகப்பட்ட போலீஸ் கேஸ்கள் உள்ளன.

கொலை முயற்சி, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.. இவர் வசித்து வரும் இதே பகுதியில் அரசு நடத்தி வரும் அரசு உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது..

நைட்டி

நைட்டி

இங்கு இந்த பகுதியில் உள்ள ஏராளமான இளைஞர்கள் காலையிலேயே வந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.. அந்த வகையில், அனைவரும் பிஸியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென உள்ளே நுழைந்தார் அப்துல்லா.. அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.. மேலாடை எதுவுமின்றி, வெறும் உடம்புடன், பேன்ட் மட்டும் அணிந்திருந்தார்.. ஜிம்முக்குள்ளே தள்ளாடியபடியே வந்தவர், திடீரென சத்தமாக பேசினார்.. பிறகு, ரகளையில் ஈடுபட்டார்..

 அப்துல்லா அட்டகாசம்

அப்துல்லா அட்டகாசம்

எனினும், அங்கிருந்த இளைஞர்கள், இதை பொருட்படுத்தாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். உடனே அப்துல்லா, அந்த இளைஞர்களை பாய்ந்து தாக்கினார்... பிறகு, ஜிம்மில் இருந்த கருவிகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டார்.. அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தவும் முடியாமல், ஜிம்மில் இருந்தோர் திணறினர்.. அதற்குள் அந்த பகுதி மக்கள் ஜிம்மில் வந்த சத்தத்தை கேட்டு ஒன்றுதிரண்டு விட்டனர்.. அப்துல்லா ஒரு இடத்தில் நிற்காமல், இங்குமங்கும் ஜிம்மில் உடற்பயிற்சி கருவிகளுடன் வலம் வந்தார்..

 நைட்டி அணிந்த பெண்

நைட்டி அணிந்த பெண்

அப்போது நைட்டி அணிந்த பெண் ஒருவர், கூட்டத்தில் துணிந்து வந்து அப்துல்லாவின் வாயிலேயே 2 அடி போட்டார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அப்துல்லா, அந்த பெண்ணை அடிக்க பாய்ந்தார்.. அதற்குள் அனைவரும் அப்துல்லாவை பிடித்து தடுத்து நிறுத்தினர்.. இதற்கு பிறகு அவரை சமாளிக்க முடியாமல், போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து, அப்துல்லாவை கைது செய்ய முயன்றனர்..

பிளேடு

பிளேடு

உடனே அப்துல்லா, ஒரு பிளேடை எடுத்து தன்னை தானே அறுத்துக் கொண்டார்.. இதை பார்த்ததும் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் பதறினர்.. அப்துல்லா கையில் பிளேடை வைத்து கொண்டே, போலீசாருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. பிறகு ஒருவழியாக, போலீசார் அவரை, கைது செய்து அழைத்து கொண்டு போனார்கள்.. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.. அப்துல்லா ஜிம்மில் செய்த அட்டகாசம் இணையத்தில் வீடியோவாகவும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரத்த காயங்கள்

ரத்த காயங்கள்

இது பற்றி மேலும் சொல்லப்படுவதாவது, "பஜார் ரோட்டில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்திற்கு தினமும் அப்துல்லா வருவாராம்.. ஆனால், மது அருந்திவிட்டு தான் ஜிம்முக்குள் நுழைவார் என்கிறார்கள்.. இதை அப்பகுதி இளைஞர்கள் பலமுறை தட்டிக் கேட்டுள்ளனர்.. இதனை கேட்காமல் அப்துல்லா தொடர்ந்து மது அருந்தி, ஜிம்மில் நுழைந்து அடிக்கடி அட்டகாசம் செய்வாராம்.. இன்றுகூட, அங்கிருந்த உபகரணங்கள் சிலவற்றை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. அப்துல்லாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால், ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு ஆட்டோ மூலம் போலீசார் முதலில் அனுப்பி வைத்தனர்... போதை தெளிந்ததும், அவரை கைது செய்வோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+