18 வயது பெண்.. வீட்டிற்குள் நுழைந்த மாந்திரீகன்.. மண்குடுவையில் ஸ்பெஷல் பூஜை.. இறுதியில் நடந்த ஷாக்
சென்னையில் இளம்பெண்ணிடம் நகை பறித்த நபரை தேடி வருகிறார்கள்
சென்னை: பில்லி சூனியம் எடுப்பதாக சொல்லி, 18 வயது பெண்ணிடம் தாலி செயினை நூதனமாக கொள்ளை அடித்த நபரை சென்னை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலமாகவே சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. கொரோனா காலம் என்றும் பார்க்காமல், இந்த குற்றங்கள் பெருகி கொண்டே போகிறது.
ஒருபக்கம் கொலை, பலாத்காரம், கொள்ளை போன்ற வன்முறைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றால், மற்றொரு புறம், நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் என வேறொரு வகையில் குற்றங்கள் பெருகி வருகிறது.

வன்முறைகள்
"உங்களுக்கு, உங்க சொந்தக்காரர்களே, பில்லி சூனியம், ஏவல் வைத்து விட்டனர், அதை, எடுக்காவிட்டால், துஷ்ட தேவதை, உங்கள் வீட்டுக்குள் நுழைந்து, வாழ்க்கை முழுவதும் கஷ்டங்களை தந்துவிடும்" என்றெல்லாம் பெண்களிடம் பீதியை கிளப்பியும், மை போட்டு பார்த்து அவைகளை எடுத்து விடுகிறோம் என்று நம்பிக்கை வார்த்தை சொல்லியும் பணம், நகைகளை பறிக்கும் வேலைகள் அதிகமாகிவிட்டன.

புகை
இதைதவிர, பேய்களை விரட்டுவதாக, வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் கூறி, சாமி படத்துக்கு முன், நகைகள் வைத்து பூஜை செய்து, கடைசியில் மயக்கப்பொடி கலந்த புகை போட்டு, அந்த பெண்கள் மயங்கி விழுந்தவுடன், மொத்தத்தையும் சுருட்டி கொண்டு ஓடுவதும் நிகழ்ந்து வருகிறது.

பில்லி சூனியம்
சென்னையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராயப்பேட்டையை சேர்ந்தவர் ரிகானாபேகம்.. 18 வயதாகிறது.. கணவர் பெயர் மன்சூர் பாஷா.. இவர்களுக்கு கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது.. இந்நிலையில், சம்பவத்தன்று ரிகானாபேகம், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது பில்லி சூனியம் கழிப்பதாக கூறி வீட்டுக்குள் ஒரு முஸ்லிம் நபர் நுழைந்துள்ளார்.. அவர் கடைகள், வீடுகளுக்கு சாம்பிராணி போடுபவர் என்று தெரிகிறது.. 45 வயதாகிறது.

பூஜை
உள்ளே நுழைந்த அந்த நபர், "இன்று உன்னுடைய கணவர் வீட்டுக்கு வரமாட்டார்.. அவர் வீட்டுக்கு திரும்பி வர வேண்டுமானால் ஒரு பூஜை போட வேண்டும்.. அதற்கு கழுத்தில் உள்ள தாலியை கழட்டி தந்தால்தான் பூஜை போட முடியும் என்று சொல்லி உள்ளார்.. இதனால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த அந்த பெண், தாலியை கழட்டி அந்நபரிடம் தந்துள்ளார்.

மாந்திரீகம்
அவரோ, அதை வாங்கி ஒரு பேப்பரில் மடித்து வைத்து கொண்டு, திடீரென மாந்திரீகம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. பிறகு ஒரு மண் குடுவையில் அந்த நியூஸ் பேப்பரை மடித்து கொடுத்துவிட்டு, அதை ஒரு மணி நேரம் கழித்து பிரிக்கும்படியும் சொல்லிவிட்டு, சூன்யம் கழிப்பதற்கு ரூ.300 யையும் பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்.

அதிர்ச்சி
அவர் சொன்னபடியே, ஒரு மணிநேரம் கழித்து பேப்பரை பிரித்து பார்த்துள்ளார் ரிகானாபேகம்.. அப்போது தாலி செயினுக்கு பதில் அதில் சிறிய கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இதையடுத்து, தாலியை நூதனமாக பறித்து சென்ற அந்த நபர் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் தந்தார்... அந்த தாலி செயின் 2 சவரனுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணையை துவக்கி உள்ளனர்.. அந்த நபர் யார் என்று தெரியாததால், வலைவீசி பிடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications