கியாரே செட்டிங்கா? நாம் தமிழர் கட்சிக்கு பெண் பொதுச் செயலாளர்-பொதுக்குழு பேச்சு-சீனில் சீமான் மனைவி?
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு "பெண்" ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாக பொதுக் குழுவில் பேசிய ஈரம் காயவில்லை.. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி சீமான், அக்கட்சியின் சட்டசபை தொகுதி அலுவலகங்களை திறக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியல் என்ற கோட்பாட்டில் இணைந்துள்ளனர். தேர்தல் அரசியல் மூலம் தமிழ் தேசிய அரசியலை வென்றெடுக்க முடியும் என்பது நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு. நடைமுறையில் இது முரணாக இருந்தாலும் இதனையும் ஏற்றுக் கொண்டு நாம் தமிழர் கட்சியில் பயணிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை வாரிசு அரசியலை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரருக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டதை அக்கட்சியினரே கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.

நாம் தமிழர் உள் விவகாரங்களில் கயல்விழி: இந்த பின்னணியில் அண்மைக்காலமாக சீமான் மனைவி கயல்விழிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவது விவாதப் பொருளாகி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் கடந்த ஆண்டு காலமானர். தடா சந்திரசேகரன் இரங்கல் கூட்டத்தில் கயல்விழி சீமான் உரையாற்றினார். இரங்கல் கூட்டம்தானே என கயல்விழி சீமானின் பங்கேற்பை கடந்து செல்ல முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. ஏனெனில் நாம் தமிழர் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து பொதுமேடையிலேயே கயல்விழி சீமான் பேசியிருந்தார். இதனால் தடா சந்திரசேகர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி கயல்விழிக்கு தரப்படுகிறதா? என்கிற கேள்வி நாம் தமிழர் வட்டாரங்களில் எழுந்தது. இதனை நாமும் பதிவு செய்திருந்தோம்.
நாம் தமிழர் கட்சியில் எனக்கு எதிராக சதி- சீமான் முன்னிலையில் கட்டுச் சோற்றை கவிழ்த்த மனைவி கயல்விழி!
பெண்ணுக்கு பொதுச்செயலாளர் பதவி: இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் டாக்டர் இளவஞ்சி, வெளிப்படையாகவே, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக பெண் ஒருவரையே அண்ணன் சீமான் நியமிக்க வேண்டும். மருத்துவராக இருப்பதால் என்னைப் போன்றவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாது. அதனால் பெண் ஒருவரை பொதுச் செயலாளர் பதவியில் அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். டாக்டர் இளவஞ்சியின் இந்த பேச்சு முழுவதுமே கயல்விழியை நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளராக்கும் முடிவுக்கு ஆதரவு திரட்டுகிற யுக்திதான் எனவும் கூறப்பட்டது.
சீமான் மனைவி 'அண்ணி' கயல்விழி நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளர்? இன்னொரு தேமுதிகவாக உருமாறுகிறதா?
நாம் தமிழர் கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசிய மருத்துவர் இளவஞ்சி நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பெண் பொதுச் செயலாளர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
— கபிலன் (@_kabilans) January 23, 2024
அந்த பெண் பொதுச்செயலாளர் கயல்விழி தான் என்பதை கூடிய விரைவில் அறிமுகம் செய்து வைப்பார்கள்.. தேமுதிக 2.0 pic.twitter.com/BgdmLZACEr
திடீர் அரசியல் சுற்று பயணம்: இந்நிலையில் திடீரென கயல்விழி சீமான் அரசியல் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். திருப்போரூர் சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, அக்கட்சி கொடியையும் ஏற்றினார். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியில் உறுப்பினராக மட்டுமே இருக்கும் கயல்விழி, சீமானின் மனைவி என்பதால் முக்கியத்துவம் தரப்பட்டு இந்த அலுவலகத் திறப்பு உள்ளிட்ட அரசியல் பயணம் மேற்கொள்ளப்படுவதை பொதுவெளியில், சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினரே பகிரங்கமாக எதிர்த்து விமர்சனம் செய்கின்றனர். இருந்த போதும் காலியாக உள்ள நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என அறிவிக்கும் போது பூனைக்குட்டிகள் வெளியே வரும் என்கின்றனர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் நடத்தி வரும் "நீக்கப்பட்டோர் பாசறை" தம்பிகள்.












Click it and Unblock the Notifications