ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல- சுதந்திரப் போராளிகள்- 'அண்ணி' கயல்விழி தலைமையில் நாம் தமிழர் முழக்கம்!
சென்னை: பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி தலைமையில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறையினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.
அக்டோபர் 7-ந் தேதி.. இஸ்ரேல் நகரங்கள் மீது காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணை மழைகளை பொழிந்தனர். அன்று தொடங்கிய யுத்தம் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினரை அடியோடு அழித்தே தீருவோம் என முடிவோடு இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளும் ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத இயக்கங்களும் துணை நிற்கின்றன.
10,000 பேர் பலி: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான இந்த யுத்தத்தில் இதுவரை 10,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான பிஞ்சு குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தத்தை நிறுத்த கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கயல்விழி தலைமையில் போராட்டம்: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையினர் சென்னையில் இன்று இஸ்ரேல்- பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர். இந்தப் போராடத்துக்கு சீமான் மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழி தலைமை வகித்தார்.
ஹமாஸ் சுதந்திர போராளிகள்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியினர், மத்திய அரசு, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இலங்கையில் நாங்கள் போராடிய போது தமிழர்களை நசுக்குவதற்கு இஸ்ரேல் நாடுதான் மிகப் பெரும் உதவியை செய்தது. ஹமாஸ் என்ற அமைப்பு சுதந்திரத்துக்காகப் போராடியக் கூடிய அமைப்பு. அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது என்பது நமது கொள்கைக்கு மிகவும் முரணான ஒன்றாகும்.

மத்திய அரசுக்கு நாம் தமிழர் அறைகூவல்: ஆகையால் இஸ்ரேல் சார்பான நிலைப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை. அகில இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவோம். இந்தியாவிலேயே முதல் முறையாக நாம் தமிழர் கட்சி இந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். இதன் மூலம் மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி அறைகூவல் விடுக்கிறது. இஸ்ரேல் எனும் கொடுங்கோல் அரசு காஸா என்ற நிலப்பகுதியையே இல்லாமல் செய்துவிடுவதற்காக யுத்தத்தை நடத்துகிறது. காஸாவை முழுமையாக ஆக்கிரமித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது என்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications