'அண்ணன்'சீப் மினிஸ்டர் ஆப் தமிழ்நாடு ஆகிட்டா இந்தியை ஒரு இடத்தில் எழுதி வெச்சிடுவியா? சீமான் ஆவேசம்!
சென்னை: தாம் தமிழ்நாடு முதல்வராகிவிட்டால் தமிழ்நாட்டில் இந்தியை ஒரு இடத்திலும் எழுதிவிட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ்நாட்டில் தங்களது கார்கள் மீது தாங்களே குண்டுகளை வீசி நாடகமாடிய சம்பவங்கள் இருக்கிறது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை எச்சரித்ததாக ஆளுநராக இருந்தவரே குற்றம் சாட்டி இருந்தார். 40 ராணுவ வீரர்களை பலி கொடுத்து அரசியல் செய்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடுவது போல வண்ண புகைகளை வீசி இருக்கின்றனர். அவர்களது நோக்கம் யாரையும் தாக்குவது என்பது இல்லை. தாங்கள் சொல்ல வரும் கருத்தை அனைவரும் கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களது கருத்தாக இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த போது எந்த நிபந்தனையின் அடிப்படையில் சேர்த்தீர்கள்? அதனுடைய வரலாறு என்ன? அந்த நிலத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தீர்கள்? காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவுக்குள் இணைந்துவிட வேண்டும். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்பது எல்லாம் என்ன பேச்சு?
அண்ணன் சீப் மினிஸ்டர் ஆப் தமிழ்நாடு ஆகிட்டா இந்தியை ஒரு இடத்திலாவது எழுதி வைத்துவிடுவார்களா? ஆட்டம் காட்ட ஆட்கள் இல்லை என்பதால் எல்லாம் நடக்கிறது. வட இந்திய கோவிலில் நான் அன்பளிப்பு கொடுத்து தமிழிலேயே எழுதி வைத்துவிட்டு வந்தால் விட்டுவிடுவார்களா? ஆனால் ராமேஸ்வரத்தில் அப்படி அன்பளிப்பு கொடுத்துவிட்டு இந்தியில் எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதுக்கு ஒரு ஆள் வேணும் தம்பி. சண்டை போடுவதற்கு ஒரு ஆள் வேண்டும் தம்பி. நம்ம மொழியை அவமதிக்கும் போது நமக்கு வரும் கோபத்தை அவர்களுக்கு உணர்த்தனும்.
தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு கொடுக்க வேண்டும்தான். எங்களிடம் எடுத்த வரியைத்தானே திருப்பி கேட்கிறோம். பேரிடர் காலங்களில் எங்களை பிச்சைக்காரர்களைப் போல நடத்தி இருக்கீங்க. நாங்க மிகவும் கையேந்திவிட்டோம். நாங்க ரூ1 கொடுத்தால் 40 பைசா திருப்பி தருகிறீர்கள். அதே வட இந்திய மாநிலங்கள் ரூ1 கொடுத்தால் ரூ3.80 பைசா திருப்பு கொடுக்கிறீர்கள். எங்களை ஒரு இனமாக, நாடாக கருதுவதில்லை. நாங்கள் செத்து விழுந்தால் தமிழ் மீனவன் என்கிறீர்கள். இந்திய மீனவராக சொல்வது இல்லை. எங்கள் வரியை, வளத்தை திருடத்தான் எங்களை வைத்துள்ளீர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications