யார் தமிழர்? பைத்தியகாரனுக்கு பரிதாபப்படுவேன்..பதில் சொல்லமாட்டேன்... ஹெச்.ராஜா குறித்து சீமான்
சென்னை: தமது தாயார் தமிழர் இல்லை என விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். பைத்தியகாரனுக்கு பரிதாப்படுவேனே தவிர பதில் தரமாட்டேன் என்று ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சீமானின் தாயார் தமிழச்சியா? மலையாளிதானே என கூறியிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வேலூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் தாய் தமிழச்சியா என கேட்டுள்ளார் பாஜகவின் ஹெச்.ராஜா. நான் பைத்திக்காரனுக்கு பரிதாபப்படுவேன். ஆனால் பதில் சொல்லமாட்டேன். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழி, உதயநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் நீட்டை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.

திமுக மீது விமர்சனம்
அதேபோல் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில்வாடும் 7 தமிழர்கள் விடுதலை பற்றி எதிர்கட்சியாக இருக்கும் போது திமுகவினர் பேசினார்கள். ஆனால் இப்போது ஆளுங்கட்சியான பின்னர் அதைப்பற்றி பேசவில்லை. 2016 ஆம் ஆண்டு டாஸ்மாக்கை மூடுவோம் என கூறிய திமுக தற்போது வாயே திறக்கவில்லை.

ஒரே நாடு- ஒரே தேர்தல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறிவிட்டு ஒரு மாநிலமான மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேர்தல் கொண்டு வருவது என்பது பைத்தியக்காரத் தனம். ஒரு மாநிலத்தில் ஆட்சி கலைந்தால் ஒட்டுமொத்தமாக எல்லா மாநிலத்துக்கும் எப்படி தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் எங்கள் கேள்வி. ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே இந்தியா என்பதெல்லாம் நடக்காது.

என்ன செய்தது மத்திய அரசு?
தமிழக அரசு இதுவரை என்ன திட்டங்களை செய்துள்ளது என நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்போம். மத்திய பாஜக அரசு ஏழரை ஆண்டுகளில் என்ன செய்தது என நீங்கள் வெள்ளை அறிக்கையை கொடுங்கள். தமிழக அரசு வேளாண் கடனை தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகள் பிரதமர் வீட்டை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் விவசாயிகளுக்கு நீங்கள் செய்யவில்லை.

மிரட்டும் திமுக
நாம் தமிழர்கள் நேரடியாக தேர்தலில் மோத கூடாது என திமுகவினர் மிரட்டுகின்றனர். பணம் தருவதாக பேரம் பேசுகிறார்கள். திராவிட அரசியல் கட்சிகள் வழக்கமாக செய்வது தான். ஆனாலும் நாம் தமிழர் கட்சியில் சிலர் அச்சப்படுகின்றனர். பிறகட்சிகளை திமுகவினர் அச்சுறுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுப்பது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான தண்டனை என தேர்தல் ஆணையம் கூறியும் பதவிகளை ஏலம் விட்டுள்ளனர். அதன் மீது தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications