சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவங்க சின்ன புள்ள.. எளிய விளிம்பு நிலையில் இருந்து வந்துருக்காங்க! மேயர் பிரியாவுக்கு சீமான் ஆதரவு!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை மேயர் பிரியா கொசு வழங்கும் விழா என பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கொசுவை ஒழிக்க வலை வழங்கும் விழா என சொல்வதற்கு பதிலாக கொசு வழங்கும் விழா" என்று சொல்லிட்டாங்க. அதை போய் பெரிய குறையா எடுத்துக்க கூடாது என கூறியுள்ளார்.

நாட்டின் மிகப் பழமையான சென்னை மாநகராட்சியின் இளம் வயது மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா கடந்த மார்ச் மாதம் பதவியேற்றார். கிட்டத்தட்ட பத்து மாதங்களை மேயராக கடந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரச்சனைக்காக நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் நள்ளிரவில் மழை பெய்த போது நள்ளிரவு என்றும் பாராமல் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்திய பிரியா மழை நீரை வெளியேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

வீராங்கனை பிரியா மரணம்- மருத்துவர்கள் சிகிச்சையில் குறையும் இல்லையே-அமைச்சர் மா.சு. புது விளக்கம் வீராங்கனை பிரியா மரணம்- மருத்துவர்கள் சிகிச்சையில் குறையும் இல்லையே-அமைச்சர் மா.சு. புது விளக்கம்

இளம் மேயர்

இளம் மேயர்

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வெகுவாக பாராட்டுதலை பெற்றது. அதே நேரத்தில் தனக்கு சம்பந்தமே இல்லாத சர்ச்சைகளிலும் பிரியா பேசப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் கே என் நேரு மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து நிலையில் அமைச்சர் நேரு தனது தந்தையை போன்றவர் இதை பெரிது படுத்த வேண்டாம் என அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கொசு வழங்கும் நிகழ்ச்சி

கொசு வழங்கும் நிகழ்ச்சி

அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புகளில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாகவும் தவறாக பேசுவதாக சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை உருவானது கடந்த வாரம் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியின் போது பேசிய அவர் கொசு வழங்கும் நிகழ்ச்சி என குறிப்பிட்டார் இதனை அதிமுக பாஜக சமூக வலைதள நிர்வாகிகளும் விமர்சித்து வந்தனர். ஆனால அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மழை நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீமான்

சீமான்


இந்நிலையில் சென்னை மேயர் பிரியாவின் பேச்சை போய் பெரிய குறையா எடுத்துக்க கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் மருத்துவ பாசறை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் மற்றும் குருதிக்கொடை முகாமை நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார்.

தம்பி உதயநிதி

தம்பி உதயநிதி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," வாரிசு திரைப்படம் தடுப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். ஆனால் தம்பி உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை. வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாகாவிட்டால் களத்தில் இறங்கி போராட தான் செய்வோம் . கட்சிகள் மாறினாலும் மாற்றங்கள் ஏதுமின்றி ஊழல் லஞ்சம் விலையேற்றம் போன்ற அதே அவல நிலைதான் தொடர்கிறது எனவும் இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

மேயர் பிரியா

மேயர் பிரியா

தொடர்ந்து சென்னை மேயர் பிரியா கொசு வழங்கும் விழா என பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான்," அவங்க சின்ன புள்ள. ஒரு எளிய விளிம்பு நிலையில் இருந்து, முதன் முதலில் ஒரு பதவிக்கு வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாமல் எத்தனையோ பல பெரிய தலைவர்களை பேச்சில் தடுமாறிடுறாங்க. அப்படி இருக்கையில் இவரை மட்டும் குறை பேசிட்டு இருக்க கூடாது. "கொசுவை ஒழிக்க வலை வழங்கும் விழா என சொல்வதற்கு பதிலாக கொசு வழங்கும் விழா" என்று சொல்லிட்டாங்க. அதை போய் பெரிய குறையா எடுத்துக்க கூடாது" என கூறினார்.

English summary
Naam Tamilar katchi coordinator Seeman, responding to reporters' questions about Chennai Mayor Priya's speech as a mosquito- giving ceremony, said that it should not be taken as a big mistake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X