பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி.. தர்மபுரியில் கேம்சேஞ்சரான சீமான்.. அதிர வைத்த ”மைக்”

Subscribe to Oneindia Tamil

சென்னை : லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை விடவும் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. இருந்தாலும் லோக்சபா தேர்தலில் தமிழக எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவிகிதம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

ஏனென்றால் அதிமுக வாக்கு சதவிகிதம் 20.46 சதவிகிதமாகவும், பாஜக வாக்கு சதவிகிதம் 11.24 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 8.19 சதவிகிதமாக உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு வழங்கப்பட்டது.

இதற்காக நீதிமன்றம் வரை சென்ற போதும் நாம் தமிழர் கட்சியால் மீண்டும் கரும்பு விவசாயி சின்னத்தை பெற முடியவில்லை. இதனால் புதிய சின்னமான ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்த வாரங்களிலேயே நாம் தமிழர் கட்சியினர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று 8.22 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளனர்.

இதன் மூலமாக நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்தையும் பெற்றுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை, திருச்சி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் 3வது இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக இருந்த பாமகவை வாக்கு சதவிகித அடிப்படையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

10 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 4 சதவிகித வாக்குகளையே பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி மற்றும் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் மணி இருவருக்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் வெறும் 21,300 வாக்குகள் தான். இதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் 65,381 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+