இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 40-ஐபோல் 4-லும் வித்தியாசம் காட்டிய சீமான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி- வீடியோ

    சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

    கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

    Naam Tamilar Movement announces candidates for 4 constituencies

    இதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 தொகுதிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த நிலையில் திமுக, அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தாகிவிட்டது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

    போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

    1. சூலூர்- வழக்கறிஞர் வெ.விஜயராகவன்

    2. அரவக்குறிச்சி- பா.க. செல்வம்

    3. ஒட்டப்பிடாரம்- மு.அகல்யா

    4. திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி

    வழக்கம் போல் வேட்பாளர் தேர்வில் புதுமையை புகுத்தியுள்ளார் சீமான். கடந்த 18-ஆம் தேதி நடந்த 40 லோக்சபா தொகுதி தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்கள் என சம இடம் கொடுத்தார். அது போல் 4 சட்டசபை தொகுதியிலும் இரு ஆண், இரு பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+