இந்தி படித்தால் வேலையா? 2 கோடி பேர் ஓட்டலில் மேஜை தான் துடைக்கிறாங்க.. பங்கமாய் கலாய்த்த சீமான்
சென்னை: இந்தி படித்தால் வேலை என்றால் வடஇந்தியர்கள் 2 கோடி பேர் இங்கு வந்து சோன் பப்டி, சொட்டர் விற்பனை செய்வதோடு, சாப்பாட்டுக்கு மேஜை துடைக்கிறாங்களே. இந்தி எனும் சேட்டையை மத்திய அரசு செய்யக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தி
தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த பிரச்சனை அடங்குவதற்குள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நாம் தமிழர் கட்சியும் அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு செய்தார். அதன்படி வரும் தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதியான இன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் இருந்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

மழையில் நடந்த பேரணி
இதையடுத்து இன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவர்கள் அனைவரும் பேரணி சென்றனர். கையில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். பேரணியின்போது மழை பெய்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

சேட்டை செய்யக்கூடாது
மத்திய அரசு ஏன் இந்தியை கையில் எடுக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. நான் கொடுத்த காசு, தமிழ் கொடுத்த காசு வைத்து கொண்டு தமிழ் படிக்க முடியாது என்றால் என்ன சொல்வது. இந்த நிலமும், அதிகாரமும் என்னிடம் வரும்போது இந்தியை கொண்டு வர விடமாட்டோம். அவரவர் தாய்மொழி அவர்களுக்கு. இந்தியை கொண்டாடுங்கள். அதற்கான நிலத்தில், மாநிலத்தில் வைத்து கொண்டாடுங்கள். அங்கு இந்தியில் படியுங்கள். என் இனத்தில் வந்து இந்தி எனும் சேட்டையை நடத்த கூடாது.

தமிழ்நாட்டில் வேலை
என் இனத்தில் வந்து இந்தி எனும் சேட்டையை நடத்த கூடாது. இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்கின்றனர். அப்படி என்றால் 2 கோடி பேர் இங்கு வந்து சோன்பப்டி, சொட்டர் விற்பனை செய்து கொண்டு திரிகின்றனர். சாப்பாட்டுக்கு மேஜை துடைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த காரணம் உழைப்பை விட்டு, வேலையை விட்டு நாம் வெளியேறிவிட்டதால் அதற்கான இடத்தில் வடஇந்தியர்கள் வந்துவிட்டனர்.

நிலம் பறிபோகிவிடும்
இதனால் தமிழ் இனம் ரொம்ப தெளிவாக இருக்க வேண்டும். உழைப்பை விட்டு வெளியேறக்கூடாது. வெளியேறிவிட்டால் நிலம் பறிபோகிவிடும். ஏனென்றால் இங்கு வேலைக்கு வருபவர்களுக்கு வேலை கொடுப்பதோடு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை வழங்குவார்கள். 2 கோடி பேர் வாக்குரிமை பெற்றுவிட்டால் இந்த நிலத்தின் அரசியல், அதிகாரத்தை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

வாக்குரிமை கொடுக்க கூடாது
நாம் அரசியலற்ற, அடிமை மக்களாக மாற்றப்படுவோம். சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவோம். ஈழத்தில் இந்த நிலை நிகழ்ந்தபோது இங்கு அவர்கள் வர தாய்நிலம் இருந்தது. இங்கிருந்து அடித்து விரட்டினால் எங்கு செல்வாய்?. எச்சரித்து கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது. நிலத்தை இழந்தால் வளத்தை இழப்போம். வளத்தை இழந்தால் இனத்தை இழப்போம். இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications