நடிகர் விஜய் எனும் தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா உங்களால் ஏன் தாங்க முடியலை? சீமான் கேள்வி
சென்னை: நடிகர் விஜய் எனும் தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா ஏன் உங்களால் தாங்க முடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் தம்பி. அது ஒரு பட்டயம் அல்ல. கல்வெட்டு எழுத்து கிடையாது. அந்தந்த காலத்துல தியாகராஜ பாகவதர் இருந்தாங்க.. அதுக்குப் பின் ஐயா எம்ஜிஆர் வந்தாங்க..அதற்குப் பிறகு ஐயா ரஜினிகாந்த் வந்தாங்க- இந்த தலைமுறைல தம்பி விஜய் உயர்ந்து நிற்கிறார்.. அதை ஏற்கனும்.. யதார்த்தம் அதுதானே சரிதானே

இன்னைக்கு இருப்பதில் அதிக வியாபாரம் விஜய்க்குதானே.. அதிக வசூல் அவருக்குதான். யதார்த்தத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். ஏன் ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா உங்களால் தாங்க முடியலை? என்ன பிரச்சனை உங்களுக்கு? அவர்தான் உயர்நிலையில் இருக்கிறாரே.. ஆமாம்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே..ரஜினிகாந்தும் இதைத்தான் சொல்வார்.. அவரும் இதை ஒப்புக் கொள்வார். இவ்வாறு சீமான் கூறினார்.

பிரச்சனை என்ன?
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று சிலர் விமர்சித்தனர். இதனை சினிமா விமர்சகர் பிஸ்மியும் சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பிஸ்மி வீட்டுக்குள் சென்று ரகளையில் ஈடுபட்டு மிரட்டினர். வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமாரும், விஜய்யை சூப்பர் ஸ்டார் என பாராட்டியது சர்ச்சையானது.
ரஜினிகாந்த் ரசிகர்களோ, ரஜினிகாந்தை நிரந்தர சூப்பர் ஸ்டார் என வாழ்த்துகின்றனர். யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தில் சீமான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் நிலையானது அல்ல; காலந்தோறும் மாறக் கூடியது என்பது சீமானின் நிலைப்பாடு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications