விடாத மோதல்.. சீமானை சீண்டுகிறார்.. விஜயலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் புள்ளி புகார்.. ட்விஸ்ட்
சென்னை: நடிகை விஜயலட்சுமி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். அதில் சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் வீடியோ வெளியிட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

பேட்டி: அவர் தனது பேட்டியில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.
ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.
அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சமாதானம்: ஆனால் அதன்பின் சமாதானம் ஆன விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் வாங்கினார். ஆனால் வாபஸ் வாங்கிய பின் சீமானுக்கு எதிராக தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு விஜயலட்சுமி விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக தன்னை "பாடி ஷெமிங்" செய்ததாக சீமானை விஜயலட்சுமி விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் விஜயலட்சுமி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். அதில் சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் வீடியோ வெளியிட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சீமானுக்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான புகார்களை வைக்கிறார். அதோடு பொய்யாக வீடியோ வெளியிட்டு வருகிறார்., அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானது. அவரின் குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மை இல்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.
எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.
முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications