உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்! துணை முதல்வராகக் கூட ஆகலாம்! கணித்துச் சொல்லும் நாம் தமிழர் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார்.

நடிகரும் தயாரிப்பாளரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் பதவி ஆட்சி அமைந்த போதே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அமைச்சர் பதவி கொடுத்தால் வாரிசு கட்சி என்ற தேவையில்லாத விமர்சனத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதால் தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் அதனை உதயநிதி ஏற்று கொண்டதாகவும் கூறப்பட்டது.

அதே நேரத்தில் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்லாது பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழக முழுவதும் உதயநிதி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பேச்சுக்கள் தீவிரம்

பேச்சுக்கள் தீவிரம்

அவரை அமைச்சராக வேண்டும் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து கட்சிக்குள்ளும் அமைச்சர்களிடையேயும் எழுந்தன. முதல் முறையாக அவர் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் அதனை வழி மொழிந்தனர். இதனை தொடர்ந்து கடந்தாண்டு இதே மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்ற பேச்சுக்கள் தீவிரமாக எழுந்தது.

எந்த துறை?

எந்த துறை?

கடந்த ஆண்டில் போக்குவரத்து துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஓராண்டு காலம் முடிந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் உதயநிதி எப்போது அமைச்சராகவார் என்ற பேச்சுகள் எழுந்தது. கடந்த சில நாட்களாக மூத்த அமைச்சர்களும் கட்சி சீனியர்களும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். அவர் அமைச்சராக வேண்டும் ஒரு தொகுதிக்குள் அவருடைய திறமை அடங்கி விடக்கூடாது என மீண்டும் பேச ஆரம்பித்தனர். ஒரு படி மேலாக துணை முதல்வர் பதவி கூட உதயநிதிக்கு பொருத்தம் தான் என கட்சியினர் கூறினர்.

அமைச்சர் ஆனார்

அமைச்சர் ஆனார்

இந்நிலையில் நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இன்று நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் கட்சியினர் உதயநிதியின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்த்துகள் குவிகிறது

வாழ்த்துகள் குவிகிறது

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதவி ஸ்டாலின் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து இருக்கிறார். உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார்.

சீமான்

சீமான்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள சீமான்," உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதுமில்லை. சொல்லப்போனால் இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒரு முடிவு தான் . இன்னும் சொல்லப்போனால் விரைவில் அவர் துணை முதல்வராக கூட வாய்ப்பு இருக்கிறது. அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+