டைம் இல்லை.. பதறியடித்து கோர்ட்டுக்கு ஓடிய சீமான்.. நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்
சென்னை: கரும்பு விவசாயி சின்னம் நாளை காலை அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. நாம் தமிழர் வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதால் அவசர விசாரணை செய்யப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சீமான் கோரிக்கை விடுத்து இருந்தார். இன்று அல்லது நாளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தார். அதை தற்போது உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.
தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை. என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் போட்டி: நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் வாக்குகள் வெகுவாக சிதறும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் பலரும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழருடன் இணைத்து பார்க்கும் நிலையில் கிராமங்களில் பலரும் இந்த கட்சியின் சின்னத்தை பார்த்து நாம் தமிழர் என்று நினைத்துக்கொண்டு மாறி வாக்களிக்கும் நிலை ஏற்படலாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அல்லது நாளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications