Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரவெடி! ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 25 லட்சம் மாணவர்கள்.. நாளை பிரமாண்ட வெற்றி விழா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. நான் முதல்வன் இணையதளத்தின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளன்று 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஏழை எளிய மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Naan Muthalvan scheme one-year success ceremony will be held in Chennai tomorrow

கல்வி உதவித்தொகை தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பல்வேறு விஷயங்களை நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழக அரசு செய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக இருக்கின்றன.

மாணவர்கள் எமிஸ் எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பெறுவது தவிர்த்து, பெரியவர்கள் வழிகாட்டியாகவும் தன்னார்வலராகவும் செயல்படலாம் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து, அடுத்தடுத்த உயரத்தை எட்டிய மாணவர்களைப் பற்றிய குறிப்புகள் அவர்களின் புகைப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கண்டு மாணவர்கள் உத்வேகம் அடையும் வகையில் இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்று இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. தொடங்கி பி.டெக்., எம்.பி.பி.எஸ். வரை ஏராளமான படிப்புகள் 33 வகையாகப் பிரிக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கலை, அறிவியல், பொறியியல், இதழியல், இசை, நடனம் என ஒவ்வொரு படிப்பு குறித்த சுருக்கமான அறிமுகம், படிப்புக் காலம், அதிலேயே என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? அந்தப் படிப்பு அளிக்கும் பணி வாய்ப்புகள் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல படிப்புகளும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப கல்லூரிகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒவ்வொன்றையும் மாநில வாரியாக க்ளிக் செய்து, தகவல்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ,மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் உள்ளிட்ட 11 வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகளும் நான் முதல்வன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வித்யா லட்சுமி இணைய முகப்பின் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க முடியும். பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, பதிவு செய்ய வேண்டும். தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக, தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்பட்டுக்கிறது. தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.

Naan Muthalvan scheme one-year success ceremony will be held in Chennai tomorrow

இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி விழா நாளை நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், 'வெற்றிப் பாதையில் நான் முதல்வன்' விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஓராண்டில் 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, 1.5 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தயாராக 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட மாவட்டம் தோறும் கல்லூரிக்கனவு திட்டம் மூலம் 75,000 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நான் முதல்வன் இணையதளத்தின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+