நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து.. நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
சென்னை: நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை இன்று (ஜூலை 14) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில் தினமும் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

இந்நிலையில் இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகா்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்- நாகா்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications