Nainar Nagendran: திரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன்! வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: "நடிகை திரிஷா குறித்து நான் வாய் தவறி பேசிவிட்டேன். எனது கருத்துக்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தேவையில்லாமல் தன்னை பற்றி பேசியது அருவருக்கத்தக்கது என திரிஷா கண்டித்திருந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் வாழ்க்கையை பொருத்தமட்டில் எந்தவொரு தனி நபர் விமர்சனத்தை நான் அனுமதிப்பதில்லை, நானும் பேசியது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை.
அதற்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் என்னிடம் பேசியிருந்தார். நேற்று கூட முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு சென்ற போது அவரும் இதுகுறித்து பேசியிருந்தார்.
உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால் என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 மணி நேரம்
தன்னை பற்றிய அருவருக்கத்தக்க பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரம் கழித்து நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் "மரியாதை குறைவான செயல்கள் எப்போதும் தட்டிக் கேட்கப்பட வேண்டியவை" என குறிப்பிட்டுள்ள திரிஷா, வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "மாநில அரசியலில் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான, பொருத்தமற்ற கருத்தை தெரிவிப்பார் என ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.
எண்ணம்
நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, எதிர்காலத்தில் அப்படி இணையும் எண்ணமும் அவருக்கு இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களை போல் அரசியலில் எப்போதும் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறேன்.
அரசியல் அடையாளம் வேண்டாம்
எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக் கூடாது என்பது பொதுவான நியதி.
உயர் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும் போது பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் எனது பெயரை இழுக்க வேண்டாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
நயினார் பேசியது என்ன?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம், விஜய் சேலத்தில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டில் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும்" என சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
குவிந்த கண்டனம்
இவரது பேச்சுக்கு திமுக பெண் எம்பிக்கள் கனிமொழி, கனிமொழி சோமு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அது போல் பாஜக மகளிரணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் நயினார் பேசியது தனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications