தவெகவில் இணைந்த செங்கோட்டையன்! எங்கள் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது! - நயினார் நாகேந்திரன்
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். அவரது இணைவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி வந்த பின்னர் எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. எனவே கட்சியன் தலைமையை வலுப்படுத்த வேண்டும், அனைத்து வாய்ப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.

இப்படி இருக்கையில்தான், சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்காக 10 நாட்கள் அவகாசம் தருகிறேன் என்று பேசியிருந்தார். ஆனால், 10 நாட்கள் கழித்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார். மறுபுறம் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இப்படி இருக்கையில், தவெகவில் செங்கோட்டையன் இணைவார் என்று பேச்சுகள் அடிபட்டன. இதனை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இன்று காலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "இந்த இணைவு பாஜக-அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று கூறியுள்ளார்.
-
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு!











Click it and Unblock the Notifications