நயினார் போட்ட போடு.. "மோடி எப்போ சொன்னார்".. வரிந்து கட்டி வெளியேறிய பாஜக.. அப்படியே பார்த்த திமுக
இந்தி திணிப்பு இருந்தால் தமிழக பாஜக எதிர்க்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை: இந்தி திணிப்பு இருந்தால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்று நயினார் நாகேந்திரன் மீண்டும் மீண்டும் இன்று கூறியுள்ளது, திராவிட கட்சிகளுக்கு கடுப்பை தந்து வருகிறது.
ஒருமுறை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அதிலும் பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் விமர்சனம் செய்தது, பாஜக தரப்புக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
"தமிழர்களை ஏமாற்ற பிரதமர் மோடி திருக்குறளையும் புறநானூற்றையும் புகழ்கிறார். இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் என்று அமித் ஷா சொல்கிறார்..

நயினாரா? சொன்னாரா?
அமித் ஷா அவர்களே, உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது. இந்தியை எதிர்த்து நாங்கள் ரத்தம் சிந்தியிருக்கிறோம். அந்த ரத்தம் வீண் போகாது. இந்த மண்ணில் இந்தியை உங்களால் திணிக்க முடியாது. திணக்க முடிந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்றார் வைகோ.. இதற்கு நயினார் நாகேந்திரன் அப்போதே ஒரு பேட்டி ஒன்றை தந்தார்.. "இந்தி திணிப்பு என்ற விஷயமே தமிழகத்தில் நடப்பதில்லை.. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலம் சென்றால், அம்மாநில மொழியில் பேசினால் தான் மக்களுக்கு புரியும்.

ஹிந்தி பேச்சு
அதேபோல் தமிழ்நாட்டில் இந்தி பேசினால் புரியாது. அதனால் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது, தமிழில் பேசுகிறார். ஆனால் பிரதமர் மோடி தமிழில் பேசினால், ஏமாற்றுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வைகோ பேசுவது தேவையில்லாதது... இந்தியை திணிப்போம் என்று மத்திய அரசு இதுவரை சொன்னதில்லை.. ஆனால், இங்கே இந்தியை வைத்து அரசியல் செய்யப்படுகிறது... புதிய கல்விக் கொள்கையில் கூட தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

பொங்கிய வைகோ
வைகோ அன்று பேசியதும் சரி, அதற்கு நயினார் தந்த விளக்கமும் சரி, இன்றுவரை இரண்டுமே மாறவில்லை.. மாறாக, அந்த திணிப்பு என்பது இன்னும் தீவிரமாகி உள்ளது என்றே சொல்லலாம்.. டெல்லியில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்துக்கு தலைமை தாங்கி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தார்.. அப்போது, "மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருந்தது சர்ச்சைக்குள்ளானது...

நயினார் நாகேந்திரன்
இந்த சூழலில், அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழுவின் 11-வது அறிக்கையில், "கல்வி நிலையங்களில் தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இனி ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆங்கில வழிக் கல்வியை இந்தி வழிக்கல்வியாக மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்குதான் இன்றைய தினம் பேரவையில் எதிர்ப்பும், தனித்தீர்மானமும் போடப்படுகிறது.. ஆனால், தமிழக பாஜக இதனை எதிர்த்துள்ளது.. இந்தி திணிப்பு என்ற விஷயமே தமிழகத்தில் இல்லை, அப்படி திணிப்பு நடந்தால், அதை தமிழக பாஜக எதிர்க்கும் என்று அடித்து சொல்கிறார் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..

மீடியா பாயிண்ட்
நயினார் மட்டுமல்ல, 2 நாளைக்கு முன்பு அண்ணாமலையும் அதே கருத்தைதான் சொன்னார்.. இந்தித் திணிப்பை மத்திய அரசு செய்தால் அதைத் தமிழக பாஜக எதிர்க்கும் என்றார்.. நயினார் இன்று பேரவையை வெளிநடப்பு செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஊடகத்தில் வந்த செய்தியை முதல்வர் இன்று சொல்லி உள்ளார்.. இந்தி திணிப்பு என்ற தவறான செய்தியை குறிப்பிட்டுள்ளார்.. எந்த மாநிலமாக இருந்தாலும், அந்தந்த தாய்மொழியில் கல்வி கற்கலாம் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது..

ABC பிரிவுகள்
எல்லா மாநில சட்டங்களும், தீர்ப்புகளும் அந்தந்த மாநில மொழிகளிலேயே வர வேண்டும் என்று பிரதமர் மோடி 2 நாளைக்கு முன்புகூட சொல்லி உள்ளார். ஏபிசி என்று நம் நாட்டில் காங்கிரஸ் கட்சி காலத்திலேயே பிரித்து வைத்துள்ளனர்.. சி பிரிவு என்பது இந்தி பேசாத மாநிலங்கள் ஆகும்.. அந்த பரிந்துரையில் என்ன சொல்கிறது எந்த மாநிலமாக இருந்தாலும், அந்தந்த தாய்மொழியில் கல்வி கற்கலாம் என்றே உள்ளதால், இது எப்படி திணிப்பாகும்?" என்று கேள்வி எழுப்பினார்..

நிர்ப்பந்தம்
எனினும், மத்திய அரசு நேரடியாக இந்தியை திணித்துவருவதாக குற்றச்சாட்டுகள் வெடித்து வரும் நிலையில், தமிழக பாஜகவின் நிலைப்பாடும், அக்கட்சி தலைவர்களின் பேச்சும், தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகின்றன.. "இந்தி மொழியைக் கட்டாயமாக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்ற மறைமுக மிரட்டல் யாருக்கானது? இதன் பெயர் இந்தி திணிப்பு இல்லாமல் வேறு என்ன? அப்படியானால் பல்கலைக்கழக கேள்வித்தாள்கள் எந்த மொழியில் இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் மொழி ஆர்வலர்கள்..!

குழப்ப முடிச்சு
அதுமட்டுமல்ல, உபியும், பீகாரும் இன்றைக்கு முன்னேறாமல் இருக்க காரணமே தாய்மொழியை மறந்து இந்தியை படித்ததுதான் என்றும், இந்தியைத் திணித்ததால் ராஜஸ்தானி, குஜராத்தி மொழிகள் அழிந்துவிட்டன என்றும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியை திணிப்போம் என்று சொல்வது, வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு தேவையில்லாத சிக்கலையும், குழப்பத்தையும் தரும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்படி இரு வேறு நிலைப்பாடுகளில் தமிழகம் திணறி நிற்க, சட்டசபையில் இந்தி எதிர்ப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது..!!
-
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications