மீனாட்சிபுரத்தில் நயினார் நாகேந்திரன் "துண்டு".. நெல்லையில் பாஜக நடிகர் வேற.. திகு திகு திருநெல்வேலி
சென்னை: நாடார் ஓட்டுக்களை குறிவைத்து பாஜக காய்நகர்த்த துவங்கிஉள்ள நிலையில், நெல்லையில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. என்னவாம்?
வரப்போகும் தேர்தலில் தென் மண்டலங்களில் கணிசமான ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதுடன், தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் நாடார் வாக்குகளுக்கும் குறி வைத்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாய வாக்குகளையும், பாஜகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் தற்சமயம் பாஜக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது. அதனாலேயே சரத்குமாரை பாஜகவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது..

சரத்குமார்: கடந்த சில மாதங்களாகவே, தொழிலதிபர் மூலம், தூது அனுப்பி சரத்குமாரை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதேபோல, திருநெல்வேலி தொகுதியில் சரத்குமார் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், நெல்லையில் ஏற்கனவே, பாஜகவின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதற்கு ரெடியாகி வருகிறார். கடந்த மாதமே தேர்தல் பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். தேர்தல் ஆபீசையும் திறந்து வைத்துவிட்டார்..
மீனாட்சிபுரம்: அதைவிட முக்கியமாக, மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார். பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தியவர்களில் முதன்மையானவராக திகழ்ந்ததே நயினார்தான்.. இவ்வளவும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கைலேயே செய்து காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதனால், எக்காரணம் கொண்டும் நெல்லையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் பிடிவாதமாக சொல்லி வருகிறாராம். எனினும், நெல்லை தொகுதிக்குள்ளேயே சில பொருமல்கள் சொந்த கட்சியிலிருந்தே எழ ஆரம்பித்துள்ளதாம்.. நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் தற்போது ஆர்வமாகி வருகிறார்களாம்.
கருத்து கேட்பு கூட்டம்: எனவே, இந்த முறை தேர்தலில் ஒதுங்கி, புதுமுகங்களுக்கு வழிவிடலாமே? பாஜகவின் மாநில துணை தலைவர், சட்டப்பேரவை குழுவின் தலைவர், தற்போது எம்எல்ஏ, என இத்தனை பதவிகளையும் நயினார் நாகேந்திரன் வகுத்து வரும்போது, எம்பி சீட்டையும், தனக்கு பின்னால் உள்ளவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாமே என்று புலம்ப தொடங்கி உள்ளனராம் .
அதற்கேற்றவாறு, கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பாஜக ஆபீசில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் மொத்தம் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டார்களாம். அப்போது தங்களுக்கு விருப்ப வேட்பாளர்களையும் பேப்பரில் எழுதி தந்தார்களாம்.
துண்டு சீட்டு: அதில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயாசங்கர் உட்பட சிலர் பெயர்கள் எழுதி தந்தார்களாம். ஆனால், அவைகளில் நயினாருக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லையாம். எனினும், இந்த முறை எம்பி சீட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கறாராக சொல்லி கொண்டிருக்கிறாராம் நயினார் நாகேந்திரன்.
சொந்த கட்சியிலேயே இத்தனை பூசல்களும், விருப்பங்களும், சலசலப்புகளும் இருக்கும்போது, சரத்குமாருக்கு எப்படி நெல்லை தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications